Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அக்கா பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை பரினீத்தி சோப்ரா!
மும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
கிராமி விருது விழாவில் லாங் ஓப்பன் டிரெஸ்ஸில் தனது மொத்த அழகும் தெரியும் படி செம்ம செக்ஸியாக உடை அணிந்து பிரியங்கா சோப்ரா உலகளவில் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
துணியின்றி நிர்வாணமாக நடித்த நடிகை.. அதுக்கெல்லாம் தைரியம் வேணும்.. பாராட்டிய பிரபல இயக்குநர்!
|
பரினீத்தி சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரினீத்தி சோப்ரா, தனது முன்னழகு மற்றும் தொடையழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். மேலும், தனது ட்வீட்டில், பாலிவுட் நடிகர் வருண் தவான் குறித்தும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
சாய்னா நேவால்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் பரினீத்தி சோப்ரா நடித்து வருகிறார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வரும் நிலையில், சாய்னா நேவால் பயோபிக்கும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வெளியேறிய ஷ்ரத்தா
ஆஷிக் 2, சாஹோ, ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான் முதலில் சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க தேர்வானார். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷ்ரத்தா கபூர் சாய்னா நேவால் பயோபிக் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், பரினீத்தி சோப்ரா சாய்னாவாக நடித்து வருகிறார்.
ஃப்ரோஸன் 2
டிஸ்னி தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் பிரம்மாண்டமாக உருவான ஃப்ரோஸன் 2 ஹாலிவுட் படத்தின் இந்தி வெர்ஷனுக்கு அக்கா பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தங்கை பரினீத்தி சோப்ரா குரல் கொடுத்திருந்தார். எல்சா கதாபாத்திரத்திற்கு பிரியங்கா குரல் கொடுக்க ஆன்னா கதாபாத்திரத்திற்காக வாய்ஸ் கொடுத்து பாராட்டுக்களை பெற்றார் பரினீத்தி.
வெளியே சொல்ல மாட்டேன்
பரினீத்தி சோப்ரா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்துடன் வருண் தவானையும் இழுத்து கேப்ஷன் போட்டுள்ளார். வருண் தவான் இந்த படத்திற்கு ஒரு டைட்டில் சொன்னார். ஆனால், அதனை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று வருணுக்கும் டேக் போட்டு அவரையும் வம்பில் மாட்டி விட்டுள்ளார் பரினீத்தி.
|
வருனீத்தி
டிஷூம் உள்ளிட்ட சில படங்களில் வருண் தவானுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் பரினீத்தி சோப்ரா. பாலிவுட்டில் இருவரும் ஹாட் ஜோடி என்ற வதந்தியும் வைரலாக பரவி வருகிறது. பரினீத்தி என்ற பெயரை ரசிகர்கள் மாற்றி வருனீத்தி என அழைத்து வருகின்றனர். தற்போது வருண் தவானை டேக் செய்து பரினீத்தி போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழும் ரசிகர்கள் அதே கமெண்ட்டை போட்டு வருகின்றனர்.
அக்காவுடன் போட்டி
கிராமி விருது விழாவுக்காக லாங் ஓப்பன் டிரெஸ்ஸில் படு கவர்ச்சியாக ஆடை அணிந்து உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், அக்கா பிரியங்கா சோப்ராவுக்கு போட்டியாக நீங்களும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பார்க்கிறீங்களா என சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.