ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்த 'தி வொய்ட் டைகர்'.. ஆரவாரத்துடன் அறிவித்த பிரியங்கா சோப்ரா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள தி வொய்ட் டைகர் படம் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் உள்ள சிறந்த சினிமா படைப்புகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆஸ்கர் நாமினேஷன்
இந்நிலையில் இதற்கான நாமினேஷன் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த நாமினேஷன் பட்டியலை அறிவித்தனர்.

சிறந்த தழுவல் கதை
இந்த நாமினேஷன் பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் தி வொய்ட் டைகர் படமும் இடம் பிடித்துள்ளது. சிறந்த தழுவல் கதைக்கான பிரிவில் பிரியங்கா சோப்ராவின் தி வொய்ட் டைகர் படம் இடம் பெற்றுள்ளது.

செம ஜாலியான பிரியங்கா
இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ளதோடு மட்டுமின்றி இணைந்தும் தயாரித்துள்ளார். தன்னுடைய படம் என்பதால் அறிவிக்கும் போதே செம குஷியாக சிரித்தும் கைகளை தட்டியும் செம சந்தோஷமாய் அறிவித்தார் பிரியங்கா சோப்ரா.

ரொம்ப ஸ்பெஷல்
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியங்கா சோப்ரா, நாங்கள் ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியுள்ளோம். வாழ்த்துகள் ராமின் மற்றும் டீம் தி வொய்ட் டைகர்.. இந்த நாமினேஷனை அறிவிப்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப பெருமையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் படம்
ஹாலிவுட் திரைப்படமான தி வொய்ட் டைகர் திரைப்படம் அரவிந்த் அடிகா என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இதில் ஆதர்ஷ் கவுரவ், பிரியங்கா சோப்ரா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தி வொய்ட் டைகர் படத்தை அமெரிக்க மற்றும் ஈரானிய இயக்குநர் ராமின் பஹ்ராணி இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











