ஆடையை கழட்ட சொன்ன இயக்குநர்..மறுத்ததால் பறிபோன படவாய்ப்பு.. பிரியங்கா சோப்ராவின் வலி நிறைந்த வெற்றி!

சென்னை : பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா சினிமாவில் அனுபவித்த வலிகளை பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.

முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

Priyanka Chopra said in an interview about the director asking her to take off her clothes

காதல் திருமணம் : நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். லண்டனில் செட்டிலான பிரியங்கா, தன்னைவிட 10 வயது சிறியவரான பாடகர் நிக் ஜோன்சை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

சீட்டடெல் வெப் தொடர் : நடிகை பிரியங்கா சோப்ரா, ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் வாரம் தோறும் வெளியாகி வருகிறது. இதில் அதிரடியான ஆக்ஷன், முத்தக்காட்சி,படுக்கை அறை காட்சி என மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா தற்போது 'லவ் அகெய்ன்' என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

Priyanka Chopra said in an interview about the director asking her to take off her clothes

பிரியங்கா சோப்ரா பேட்டி : இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரியங்கா சோப்ரா, சினிமாவின் நுழைந்த போது சந்தித்த அவமானங்களை மனம்விட்டு பேசிஉள்ளார். அதில், சினிமாவில் நான் நுழைந்த போது இந்த சம்பவம் நடந்தது. இந்தி படம் ஒன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தேன் அப்போது ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

ஆடையை கழட்ட சொன்னார் : நானும் நடிகருடன் நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், இயக்குநர் அந்த காட்சியில் வெறும் உள்ளாடையுடன் நடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், என் காஸ்ட்யூம் டிசைனரை அழைத்து என் ஆடையை கழட்டி, உள்ளாடையை காட்ட சொன்னார்.மேலும் உள்ளாடையுடன் நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று ஆபாசமாக பேசினார்.

Priyanka Chopra said in an interview about the director asking her to take off her clothes

பட வாய்ப்பு பறிபோனது : பல பேர் முன்னிலையில் அந்த இயக்குநர் அநாகரீகாக நடந்து கொண்டதால் நான் மிகவும் மன வேதனை அடைந்து உள்ளாடையுடன் நடிக்க மறுத்துவிட்டேன். இதனால், அந்த படவாய்ப்பு பறிபோனது என பிரியங்கா சோப்ரா தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பேட்டி பாலிவுட் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Priyanka Chopra said in an interview about the director asking her to take off her clothes

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X