twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியாங்கா சோப்ரா கிவ் இந்தியா திட்டத்தின் மூலம்... 1.85 கோடி நிதி திரட்டியுள்ளார் !

    |

    லண்டன் : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கொரோனா வைரசை எதிர் கொள்ள கிவ் இந்தியாவுடன் இணைந்து நிதியை திரட்டி வருகிறார்.

    24 மணி நேரத்திற்குள் ரூ .1.85 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேசருடன் போஸ் கொடுத்த விஜய்65 ஹீரோயின்! உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேசருடன் போஸ் கொடுத்த விஜய்65 ஹீரோயின்!

    165+ 10-லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

    3,498 பேர் உயிரிழப்பு

    3,498 பேர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    நிதி திரட்டினார்

    நிதி திரட்டினார்

    இந்த இக்கட்டான நேரத்தில், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் அயராது உழைத்து வருகிறார். நேற்று, பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.அதில், கிவ் இந்தியாவுடன் இணைந்து நிதி திரட்டுவதாக அறிவித்தார். இதுபற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்போது ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்கலாம்.

    ஆம்புலன்ஸ் இல்லை

    ஆம்புலன்ஸ் இல்லை

    நான் லண்டனில் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் இருக்கிறார்கள். மருத்துவமனைகள் திறன் கொண்டவையாக இல்லை, ஐ.சி.யூகளில் அறைகள் இல்லை, ஆம்புலன்ஸ்கள் மிகவும் பிஸியாக உள்ளன, ஆக்ஸிஜன் வழங்கல் குறைவாக உள்ளது, நாளுக்கு நாள் மரணத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இந்தியா எனது வீடு, இந்தியா தற்போது மோசமான நிலையில் உள்ளது என்றார்.

    உங்களால் முடிந்த உதவியை

    உங்களால் முடிந்த உதவியை

    எனவே, தயவுசெய்து உங்கள் வளங்களை பயன்படுத்துங்கள், இந்த தொற்றுநோயைத் தடுக்க உதவுங்கள், தயவுசெய்து நன்கொடை அளிக்கவும். நிறைய பேர் கோபமாக இருக்கலாம். நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்று அவசரத்தை புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து நன்கொடை அளியுங்கள்.உங்களால் முடிந்த உதவியை இந்தியாவுக்கு செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் அவர் பதிவிட்டு இருந்தார்.

    ரூ1.85 கோடி நிதி உதவி

    அவர், அந்த வீடியோவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் ரூ .1.85 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், டெல்லி, மும்பை மற்றும் பெங்களுரில் 165+ 10-லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார். இது ஒரு மாதத்திற்கு 830+ சிக்கலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்ய உதவும் என்று அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Priyanka Chopra sets up covid 19 relief fund
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X