பிறந்தநாள் அதுவுமா இப்படியா.. பிகினி உடையில் காட்சி தந்த பிரியங்கா சோப்ரா.. சொக்கிப் போன ஃபேன்ஸ்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ரா தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், தற்போது ஹாலிவுட்டிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு கத்ரீனா கைஃபை போலவே பிரியங்கா சோப்ராவும் பிகினியில் காட்சி அளித்துள்ளார்.

40 நெருங்குது
1982ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி ஜம்ஷத்பூரில் பிறந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா மற்றும் அப்பா அசோக் இருவரும் இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாக பணியாற்றிவர்கள். நடிகை பிரியங்கா சோப்ரா இன்று தனது 39வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

மிஸ் வோர்ல்ட்
மாடலிங் துறையில் ஆர்வத்தை செலுத்தி வந்த பிரியங்கா சோப்ரா, 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.
Recommended Video

விஜய் படத்தில் அறிமுகம்
2002ம் ஆண்டு அறிமுக இயக்குநர் மஜித் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக சினிமா உலகில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட் படங்களில் அதிக அளவு வாய்ப்புகள் குவியவே அங்கேயே முன்னணி நடிகையாக செட்டில் ஆகி விட்டார்.

சர்வதேச புகழ்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா அமெரிக்காவுக்கும் மும்பைக்கும் அடிக்கடி பறந்து வருகிறார்.

பர்த்டே டிரெஸ்
39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது 65 மில்லியன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிகினி உடையில் படு ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்து பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துள்ளார். 1.6 மில்லியன் பேர் லைக் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

எக்ஸ்பெக்டேஷன் vs ரியாலிட்டி
செம ஹாட்டாக பிகினி உடையில் போஸ் கொடுக்க வேண்டும் என எக்ஸ்பெக்டேஷன் செய்ததாகவும், ஆனால், சிரிப்பு வந்து விட்டது என்றும் எக்ஸ்பெக்டேஷன் vs ரியாலிட்டியாக ஃபன் கலந்து இந்த பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியங்கா சோப்ரா!


Click it and Unblock the Notifications











