19வது வயசுல பிரியங்கா சோப்ரா எப்படி இருந்தாரு தெரியுமா? பிகினியுடன் பக்கா போஸ் கொடுத்து நிக்கிறாரு!
மும்பை: சமீபத்தில் தனது சுய சரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தனது 19 வயது த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
தளபதி விஜய்யுடன் கோலிவுட்டில் தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், தற்போது ஏகப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.
ஆஸ்கர் நாமினேஷனை கடந்த மார்ச் 15ம் தேதி தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து அறிவித்தார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா புத்தகம்
அன்பினிஷ்ட் என்கிற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்திய நடிகையாக இருந்து வந்த இவர், சமீப காலமாக ஏகப்பட்ட ஹாலிவுட் புராஜெக்ட்களில் நடித்து சர்வதேச நடிகையாக மாறியுள்ளார்.

கிளாம் குயின்
சினிமாவில் ஒரு பக்கம் கலக்கி வரும் இவர், மறுபக்கம் மாடலிங் துறையிலும் அமர்க்களம் செய்து வருகிறார். 61.4 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் எல்லி மேகஸினுக்காக கருப்பு நிற பிகினி உடையில் கொடுத்த உச்சகட்ட கவர்ச்சி போஸ் ஏகப்பட்ட ரசிகர்களை கிறங்கடித்தது.

ஆஸ்கர் அறிவிப்பு
தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து கடந்த மார்ச் 15ம் தேதி ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலை வெளியிட்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த அறிவிப்பின் இறுதியில் மிகப்பெரிய ஆஸ்கர் சிலையை தூக்கிக் கொண்டு கணவனும் மனைவி எஸ்கேப் ஆவது போலவும் சின்ன டிராமா செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

தி ஒயிட் டைகர்
அதுமட்டுமின்றி தனது நடிப்பில் வெளியான தி ஒயிட் டைகர் திரைப்படமும் ஆஸ்கர் போட்டியில் உள்ள அறிவிப்பை ரொம்பவும் சந்தோஷத்துடனும் பெருமிதத்துடனும் அறிவித்தார் பிரியங்கா சோப்ரா. இந்திய நடிகை ஒருவர் இப்படி ஆஸ்கர் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருவது அனைத்து இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே உள்ளது.

கடற்கரையில் படுத்துக் கொண்டு
கடந்த வாரம் பஹாமாஸ் தீவில் தனது கணவருடன் சம்மர் சுற்றுலாவை ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா, கடற்கரையில் பீன் பேக்கில் தொடை தெரிய படுத்துக் கொண்டு இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஒரு மில்லியனுக்கும் மேல் லைக்குகளை குவித்தார்.

19 வயதில்
இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தனது 19 வயது இளம் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த புகைப்படத்திலேயே பிகினி உடையில் செம போல்டாக போஸ் கொடுத்து தான் ஒரு ஹாட் பாம்ஷெல் என்பதை நிரூபித்துள்ளார்.
Recommended Video

வெட்கம்னா என்ன
19வயது பிரியங்கா சோப்ராவுக்கே வெட்கம்னா என்னன்னே தெரியாது. இப்பவும் அப்படித் தான் என பயங்கரமாக கேப்ஷன் கொடுத்து மில்லியன் கணக்கான ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் பிரியங்காவின் தி ஒயிட் டைகர் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்க பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











