அது போதை.. பெருமையா இருக்கு.. வீடியோவை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா.. கமெண்ட்ஸ பாக்கனுமே!
சிட்னி: தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, அதன் பின்னர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல், பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் கொடி நாட்டிய பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டிற்கு குடிபெயர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும்.
பொதுவாக ஒரு நடிகை என்றால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகையாக நீடிப்பது என்பது மிகவும் சிரமம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இப்படியான விதிகளை தகர்த்தெறிந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகிகள் மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டு வரும் நிலையில், தனது இருப்பை தொடர்ந்து உயரத்திற்கு கொண்டு சென்ற நடிகையாக பிரியங்கா சோப்ரா உள்ளார்.

ஒரு நடிகை என்றால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும் நடிகர் தரப்பில் இருந்தும் எதிர்பார்க்கப்படுவது, கச்சிதமான உடல் அமைப்பு என்பது இங்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. வாட்டசாட்டமான உடல், கச்சிதமான முகத்தோற்றம், சலிப்பை ஏற்படுத்தாத கிளாமர் லேங்குவேஜ் என இவை கட்டாயம் இருக்க வேண்டும், அதன் பின்னர்தான் நடிப்புத்திறமை எல்லாம். ஆண்களை மையப்படுத்தியே படங்கள் எடுத்தும் பழகிய இந்திய சினிமாவில் இவைதான் நடிகைகளிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளன. இப்படியான விதிமுறைகளைக் தகர்த்தெறிந்து இன்றைக்கு தான் கால் பதித்துள்ள ஹாலிவுட்டிலும் தவிர்க்கமுடியாத கதாநாயகியாக வலம் வருகின்றார் என்றால், பிரியங்கா சோப்ரா உண்மையிலேயே தரமான நடிகைதான்.

ஹாலிவுட் எண்ட்ரி: தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை,அந்தாஸ், ஃபேஷன் மற்றும் பர்ஃபி மற்றும் மேரி கோம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைக் குவித்தார். ஏபிசி திரில்லர் தொடரான குவாண்டிகோவில் நடித்து ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா. இதில் நடித்ததன் மூலம் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடரின் முக்கிய கதாபாத்திரமான முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். குவாண்டிகோவைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி , அவர் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஹாலிவுட்டில் ஏற்படுத்தினார்.

வீடியோ: பிரியங்கா சோப்ரா தற்போது தி ப்ளஃப் படத்தில் ஃபிராங்க் ஈ ஃப்ளவருடன் இணைந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றுகிறார். இந்த படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் தனது தொடக்க காலங்களில் மேடைகளில் நடனமாடிய வீடியோக்களை இணைத்து ஒரே வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

போதை: மேலும் அந்த பதிவில்," இந்த வீடியோக்கள் எல்லாம் 2000 களுக்கு முற்பட்ட காலங்களில் எடுக்கப்பட்டது. நான் முதன்முதலில் மும்பையில் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கியபோது, மேடையில் நடனமாடுவதில் எனக்கு எவ்வளவு விருப்பம் இருக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. நான் பள்ளியில் படிக்கும் போது, எப்போதும் மேடையில் இருப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன், ஆனால் இந்தியாவில் உள்ள மிகவும் நம்பமுடியாத பாடகர்கள் பாடிய திரைப்படங்களின் பாடல்களில் நான் பாடும்போது வித்தியாசமாக இருந்தது. பார்வையாளர்கள். இது போதை.
பெருமை: மேடை மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் என்னை மேலும் மேலும் நம்பிக்கையடையச் செய்த நடன மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மீது சாய்ந்து கொள்கின்றேன். எனக்கு தெரியாமல், எனது பயணத்தில் இவ்வளவு பெரிய அளவில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இன்று நான் இருக்கும் பெண்ணை வடிவமைக்கும் 20 வயதில் ஒரு பெண்ணுக்கு அது மிகவும் சவாலான விஷயம்தான். நான் அந்த 20 வயது பெண்ணை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் அந்த 20 வயது பெண்ணின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு நன்றி. உங்கள் இளமைக் காலங்களை நினைத்து பெருமிதம் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். நேற்றைய விடாமுயற்சியால் இன்று நீங்கள் இருக்கிறீர்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ், 'என்றும் எப்போதும் நான் உனது மிகப்பெரிய ரசிகன் பேபி' என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











