twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகள் கேட்கத் தயங்கிய அந்த கேள்வியை தைரியமாக கேட்ட ப்ரியங்கா

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: திரையுலகில் ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம் என்று இருப்பதை விளாசியுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

    பாலிவுட் மட்டும் அல்ல எந்த உட்டாக இருந்தாலும் இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் அவர்களுக்கு இடையே சண்டை வரும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அவர்கள் சண்டையே போடாவிட்டாலும் இருவருக்கும் இடையே பிரச்சனை என்று தான் கூறப்படும்.

    அதுவே ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடித்தால் அவர்களுக்கு இடையே ப்ரோமான்ஸாம். அதாவது சகோதர பாசத்துடன் பழகுகிறார்களாம். 2 நடிகர்கள் சேர்ந்து நடித்தால் சண்டை வராதாம்.

    கரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா? கரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா?

    ப்ரியங்கா சோப்ரா

    ப்ரியங்கா சோப்ரா

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பெண்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் அவர். பெண்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் ஒருவரின் வாய்ப்பை பெற மற்றொருவர் முயற்சி செய்வதாக ப்ரியங்கா கூறினார்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. திரையுலகில் நடிகர்களுக்கு ஒரு நியாயம், நடிகைகளுக்கு ஒரு நியாயம் என்று உள்ளது. நான் பேட்டிகளுக்கு செல்லும்போது நீங்கள் அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கிறீர்களே, ஒத்துப் போகிறதா, சண்டை இல்லையா என்று கேட்டுள்ளனர்.

    ப்ரோமான்ஸ்

    ப்ரோமான்ஸ்

    இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடித்தால், வாவ் அவர்கள் எப்படி ஒற்றுமையாக உள்ளார்கள். ப்ரோமான்ஸ், சிறப்பாக சேர்ந்து நடிக்கிறார்கள் என்று பேசுகிறார்கள். ஆனால் நடிகைகள் சேர்ந்து நடித்தால் சண்டை வருமாம். பெண்களுக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கினால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படாது. மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். நாம் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்கிறார் ப்ரியங்கா.

    ஐ.நா. தூதர்

    ஐ.நா. தூதர்

    ப்ரியங்கா மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் அவரை விளாசி சத்தம் போட்டார். ஐ.நா. நல்லெண்ண தூதராக இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான அணு ஆயுத போரை ஊக்குவிக்கிறீர்களே என்று அந்த பெண் ப்ரியங்காவிடம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood actress Priyanka Chopra has highlighted the double standards in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X