மிரட்டும் கொரோனா லாக்டவுன்..வீட்டுக்குள் இருந்து 2 மாதத்துக்குப் பின் வெளியே வந்த பிரபல ஹீரோயின்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாக்டவுன் காரணமாக இரண்டு மாதத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் பிரபல நடிகை.

Recommended Video

Anchor DD & Priyanka Great gesture of Humanity | Dheena Thanking Video

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

இவர் விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்த அவர் பிறகு ஹாலிவுட்டுக்குச் சென்றார்.

நிக் ஜோனாஸ்

நிக் ஜோனாஸ்

அங்கு, பேவாட்ச், எ கிட் லைக் எ ஜேக், இஸ்நாட் இட் ரொமான்டிக் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் கவனிக்கப்பட்டன. இவர், தன்னை விட வயது குறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து வந்தார். காதலுக்கு இரண்டு பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

இவர்கள் திருமணம், ஜெய்ப்பூரில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா சென்றுவிட்ட பிரியாங்கா சோப்ரா, அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை பின்பற்றுகின்றனர். இந்த வைரஸ், அமெரிக்காவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

ஒரு சில மாகாணங்களில் ஊரடங்கு இந்த மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில், மாஸ்க் அணிந்து விழிகள் தெரியும்படி செல்பி போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

வெளியே செல்கிறேன்

வெளியே செல்கிறேன்

அதற்கு கேப்ஷனாக, கண்கள் ஒரு போதும் அமைதியாக இருப்பதில்லை என்று கூறியுள்ள அவர், இரண்டு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன்முதலாக வெளியே செல்கிறேன், மாஸ்குக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பலர் லைக் செய்துள்ளனர். பல ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X