என்னதான் கிளாமரா டிரெஸ் பண்ணாலும்.. சேலை தான் பெண்களுக்கு அழகே.. டிரெண்டான #Vocal4Handmade

சென்னை: பிரியங்கா சோப்ரா முதல் பிரணிதா வரை திடீரென நம்ம நாட்டு ஹீரோயின் சேலையில் செம்ம அழகா போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வராங்களே..

Recommended Video

கலர் கலர் புடவையில் டிக்டாக் செய்த தொகுப்பாளினி.. வைரலாகும் வீடியோ

என்ன விசேஷம் என பார்த்தால், நெசவாளர்களை போற்றும் நாள் நேற்று கொண்டாடப்பட்டு இருக்கிறது.

இதை அறிந்த ஹீரோயின்கள் சேலை கட்டியிருக்கும் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு, #Vocal4Handmade என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்துள்ளனர்.

சேலை தான் அழகு

சேலை தான் அழகு

என்ன தான் நடிகைகள், குட்டி டிரெஸ் போட்டுக்கொண்டு செம செக்ஸியாக நடித்தாலும், சேலை கட்டி அவர்கள் நடிக்கும் போது தனி அழகும், முகத்தில் அந்த மோகன புன்னகையும் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும். சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்று கொடி பறக்குது படத்தில் சும்மாவா பாட்டு வச்சாங்க..

சேலையில் பிரியங்கா சோப்ரா

சேலையில் பிரியங்கா சோப்ரா

மெட் காலா நிகழ்ச்சியில் எந்தளவுக்கு ஃபேஷனாக கிளாமராக உடை உடுத்த முடியுமோ அந்தளவுக்கு படு கவர்ச்சியாக உடை உடுத்தும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலேயே பிசி ஆனாலும், நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு, பச்சை நிற சேலையில், அழகாக தோன்றி, கைத்தறி நெசவாளர்களை காக்க உறுதியேற்போம் என ட்வீட் போட்டுள்ளார்.

மரியாதை கொடுக்கணும்

மரியாதை கொடுக்கணும்

நெசவுத் தொழில் என்பது சாதாரண விஷயம் அல்ல, உடல் வலிக்க வேலை செய்து, கைத்தறி ஆடைகளை உருவாக்கும் நெசவாளர்களை எப்போதுமே மக்கள் ஆதரிக்க வேண்டும். நெசவுத் தொழிலை விட்டு பலர் வெளியேறி வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. கைத்தறி சேலைகளை பெண்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கினால், அவர்களது வாழ்வாதாரம் பலமாகும் என ரகுல் ப்ரீத் சிங் சேலை அணிந்தபடி இன்ஸ்டாவில் சூப்பரான போஸ்ட்டையும் போட்டுள்ளார்.

பட்டு நெய்யும் பிரணிதா

பட்டு நெய்யும் பிரணிதா

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பெங்களூருவில் பசியால் வாடிய லட்சக் கணக்கான மக்களின் பசியை ஆற்றி வந்த நடிகை பிரணிதா, கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பட்டு நெய்யும் புகைப்படத்துடன் பக்காவாக போஸ்ட் போட்டுள்ளார்.

எனக்கு அழகே சேலை தான்

எனக்கு அழகே சேலை தான்

எந்த உடையும் என்னை இந்த அளவுக்கு அழகாக காட்டுவதில்லை. எப்போதுமே சேலையில் தான் அழகாக உணர்கிறேன் என நடிகை டாப்ஸி சேலை அணிந்து மிகவும் அம்சமாக இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு, #NationalHandloomDay என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளார். மேலும், பல நடிகைகளும் சேலையில் இருக்கும் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X