»   »  3 முறை தற்கொலைக்கு முயற்சித்தார் பிரியங்கா சோப்ரா.. குண்டைப் போடும் மாஜி மேனேஜர்!

3 முறை தற்கொலைக்கு முயற்சித்தார் பிரியங்கா சோப்ரா.. குண்டைப் போடும் மாஜி மேனேஜர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மன அழுத்தத்தால் 2,3 முறை தற்கொலைக்கு முயன்ற பிரியங்கா சோப்ராவை தான் காப்பற்றியதாக, பிரியங்காவின் முன்னாள் மேனேஜர் பிரகாஷ் ஜாஜூ தெரிவித்திருக்கிறார்.

இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவின் சார்பில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

'குவான்டிகோ' தொலைக்காட்சித் தொடரின் மூலம் கடந்த ஆண்டு ஹாலிவுட் சென்று புகழ்பெற்றவர் பிரியங்கா சோப்ரா.மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் வெற்றி நடிகையாக பிரியங்கா தற்போது வலம்வருகிறார்.

பிரகாஷ் ஜாஜூ

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக நிறையமுறை தற்கொலை செய்ய முயன்ற பிரியங்காவை தான் காப்பாற்றியதாக அவரது முன்னாள் மேனேஜர் பிரகாஷ் ஜாஜூ தெரிவித்திருக்கிறார். மன அழுத்தம் காரணமாக நடிக, நடிகையர் தற்கொலை செய்துகொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரகாஷின் கருத்து பாலிவுட் உலகில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக்கு

சிறைக்கு

பிரியங்காவிற்கு தப்பான மெசேஜ்களை அனுப்பியதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் ஜாஜூ 67 நாட்களை ஜெயிலில் கழிக்கும் படி நேர்ந்தது. இந்நிலையில் பிரியங்கா குறித்த சில விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரகாஷ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

67 நாட்கள்

67 நாட்கள்

பிரகாஷ் ஜாஜூவின் சிறை அனுபவங்களை வைத்து '67 நாட்கள்' என்ற படத்தை எடுக்கப்போவதாக, பிரியங்காவின் முன்னாள் காதலர் அஸீம் மெர்ச்சன்ட் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னுடைய சார்பில் வக்கீல் நோட்டிஸ் ஒன்றை பிரியங்கா,அஸீமிற்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் இப்படம் விரைவில் உருவாகும் என்று பிரகாஷ் ஜாசு தற்போது தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ஜாஜுவின் இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Bollywood Actress Priyanka Chopra Tried 2,3 Times for Suicide Says her Ex Manager Prakash Jaju.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil