இப்ப "இது" ரொம்ப முக்கியமா....பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மும்பை : 2000 ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து 2002 ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சொந்த குரலில் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். அதற்கு பிறகு இந்திக்கு சென்ற பிரியங்காவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் குவிந்தது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டிவி ஷோக்களிலும் பங்கேற்று, சர்வதேச நடிகையானார். 2018 ம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோன்சை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Priyanka Chopra trolled for her latest pictures amid COVID-19 crisis

சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்களையும், உடன் பணியாற்றியவர்களை பற்றியும் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி, அதை ப்ரோமோட் செய்யும் பணியில் பிரியங்கா ஈடுபட்டு வருகிறார். அத்துடன் நியூயார்க் நகரில் ரெஸ்டாரென்ட் தொழிலையும் துவக்க உள்ளார். ஏற்கனவே தனது சமூக சேவையால் யுனிசெஃப் தூதராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார். அப்படி நேற்று கவர் ஃபோட்டோ ஒன்றிற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா வெளியிட்டிருந்தார். இந்த ஃபோட்டோவை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 8000 க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ஆனால் நாடு இப்போது இருக்கும் கொரோனாவின் தீவிர தாக்கமான, நெருக்கடியான சூழலில் இது போன்ற கவர்ச்சி ஃபோட்டோஷுட் விளம்பரம் தேவையா என நெட்டிசன்கள் இந்த ஃபோட்டோவை ட்ரோல் செய்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக பணிகளில் ஈடுபடுவோர், நாடு இருக்கும் நெருக்கடியான சூழலில் உதவிகள், விழிப்புணர்வுகளை ஏற்படுவதை தவிர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X