யம்மாடியோவ்.. 358 கோடிக்கு ஒரே ஒரு வைர நெக்லஸா?.. கொடுத்து வச்ச பிரியங்கா சோப்ரா!

ரோம்: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா பல்கரி ஜுவல்லரியின் 140 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட நிலையில், 140 காரட் வைர நெக்லஸை அணிந்து காட்சித் தந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டியில் டைட்டில் வென்ற பிரியங்கா சோப்ரா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Priyanka Chopra wears 358 Crores worth Diamond Necklace stuns everyone

அதன் பின்னர் பாலிவுட்டில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் பிரியங்கா சோப்ராவுக்கு குவிந்த நிலையில், அங்கே முன்னணி நடிகையாக மாறினார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் பிரியங்கா சோப்ராவை நோக்கி வந்த நிலையில், அங்கிருந்து நகர்ந்து ஹாலிவுட்டுக்கு சென்று விட்டார்.

140 காரட் வைர நெக்லஸ்: நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பல்கரி ஜுவல்லர்ஸின் 140 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த விலை மதிப்பு மிக்க வைர நெக்லஸை அணிந்து கொண்டு காட்சி தந்தார். ரோம் நகரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரியங்கா சோப்ராவுடன் ஹாலிவுட் நடிகைகளான ஆனா ஹத்வே, லியூ இஃபை உள்ளிட்ட நடிகைகள் பல்கரி ஜுவல்லரியின் வைர நெக்லஸ்களை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளனர்.

Priyanka Chopra wears 358 Crores worth Diamond Necklace stuns everyone

358 கோடி ரூபாய்: Aeterna Serpenti எனும் பெயர் கொண்ட இந்த வைர நெக்லஸ் விலை இந்திய மதிப்பில் 358 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. சும்மா 2800 மணி நேரம் செலவழித்து 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களை வைத்து இந்த பிரெஸ்டிஜியஸான வைர நெக்லஸை உருவாக்கியதாக பல்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வைரத்தை அணிந்துக் கொண்டு போஸ் கொடுக்கும் பாக்கியம் பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்திருப்பது பல நடிகைகளை பொறாமையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கோடி இருந்தாலே பெண்கள் பல சவரன் நகைகளை உடல் முழுக்க அணிந்துக் கொள்வார்கள். ஆனால், ஒரே ஒரு வைர நெக்லஸ் விலையே 358 கோடி ரூபாய் என்பதை கேட்டவுடனே பலருக்கு தலையே சுற்றியிருக்கும்.

அடுத்த ஹாலிவுட் படம்: தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக 'ஹெட் ஆஃப் ஸ்டேட்' படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டும் பல்கரி வைர விழா திருவிழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X