இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா?
Recommended Video

லண்டன்: நடிகை மெகன் மார்கல், இளவரசர் ஹாரி திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா விலை உயர்ந்த காலணி அணிந்து சென்றுள்ளார்.
ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசி டயானாவின் இளைய மகன் இளவரசர் ஹாரியை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
லண்டனில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

ப்ரியங்கா
ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ராவும், நடிகை மெகன் மார்கலும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து தோழிகளாகிவிட்டனர். அதனால் தோழி மெகன் அழைத்ததின்பேரில் ப்ரியங்கா அவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காலணி
ப்ரியங்கா லாவண்டர் நிறத்தில் உடை அணிந்திருந்தார். அவர் ஜிம்மி சூ காலணி அணிந்து மெகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த காலணியின் விலை ரூ. 1.34 லட்சம் ஆகும்.

வியப்பு
ப்ரியங்கா அணிந்திருந்த காலணியில் ஸ்வரோஸ்கி கற்கள் இருந்தது. ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான காலணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுன்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஜொலி ஜொலிக்கும் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











