ஜோத்பூர் அரண்மனையில் திருமணம், அமெரிக்காவில் ரிசப்ஷன்: கலக்கும் ப்ரியங்கா சோப்ரா

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இந்தியா வந்த நிக் தனது வருங்கால மனைவியுடன் ஜோத்பூர் சென்றார்.

அவர்கள் ஜோத்பூர் சென்றதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

நிக்

நிக்

ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் ஒரு நாள் பயணமாக ஜோத்பூர் சென்றார்கள். இதற்கும் அவர்களின் திருமணத்திற்கும் தொடர்பு உள்ளது என்று பேச்சு கிளம்பியது. இதை பார்த்த ப்ரியங்கா சோப்ராவோ நெருங்கிய தோழியின் கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஜோத்பூர் சென்றதாக விளக்கம் அளித்தார்.

திருமணம்

திருமணம்

ப்ரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் வரும் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணத்தை ஜோத்பூர் அரண்மனையில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அதனால் தான் ஜோத்பூர் சென்று அரண்மனையை சுற்றிப்பார்த்துவிட்டு வந்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டவர்கள்

ப்ரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் இந்திய-மேற்கத்திய முறைகளின் படி நடக்க உள்ளதாம். அதன் பிறகு அமெரிக்காவில் திருமண வரவேற்பு நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். நிக் திருமண வேலைகளை கவனிக்க அடுத்த மாதம் 2வது வாரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிசி

பிசி

ப்ரியங்கா தற்போது பாலிவுட் படத்தில் பிசியாக இருப்பதால் மும்பையில் தங்கியுள்ளார். தனது வருங்கால மனைவியை பார்க்க நிக் அவ்வப்போது மும்பை வந்து செல்கிறார். அவர்களின் திருமணம் நடக்கும் அதே மாதத்தில் தான் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கின் திருமணமும் நடைபெறுகிறது. தீபிகா, ரன்வீரின் திருமணம் நவம்பர் 20ம் தேதி இத்தாலியில் நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X