18 கோடிப்பு… பிரியங்கா சோப்ராவின் கல்யாண போட்டோ ரூ. 18 கோடி
Recommended Video

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோஸின் திருமண புகைப்பட உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அடுத்த மாதம் 1ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இந்த ஜோடியின் திருமணத்தைக் காண இந்திய திரையுலகமே ஆவலாக இருக்கிறது. இந்த நிகழ்வில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். 1500 லிருந்து 2000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான திருமண நிகழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிடும் உரிமையை ஒரு வெளிநாட்டு பதிப்பகம் வாங்கியுள்ளது. சுமார் 18 கோடி ரூபாய் கொடுத்து அவர்களின் புகைப்படங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்த பத்திரிகை என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவுக்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கும் திட்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











