விஜய் எனக்குள்ள என்னெல்லாம் பண்ணி வச்சிருக்கார் தெரியுமா.. ஓப்பனாக சொல்லிய நடிகை!
மும்பை : தனது முதல் படத்திலேயே தமிழில், விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. மஜித் இயக்கிய தமிழன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இந்த படம் 2002 ம் ஆண்டு ரிலீஸ்செய்யப்பட்டது. அதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா, பிஸியான முன்னணி நடிகையாக மாறி விட்டார். இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பற்றியும், அவருடன் சேர்ந்த நடித்த அனுபவம் பற்றியும் பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

புத்தகம் எழுதும் பிரியங்கா
பிரியங்கா சோப்ரா தற்போது Unfinished என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதில் தனது வாழ்க்கையில் பெற்ற நல்ல மற்றும் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தாக்கம் ஏற்படுத்திய விஜய்
இதில் தனது முதல் பட ஹீரோவான விஜய் பற்றி பிரியங்கா கூறுகையில், விஜயின் பணி மற்றும் தனது ரசிகர்களிடம் அவர் காட்டும் பரிவு எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வழியில் நான்
அமெரிக்காவின் குவான்டிகோ பகுதியில் சூட்டிங்கிற்காக சென்ற போது, உணவு இடைவெளியில் ரசிகர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வந்தனர். அப்போது நான் விஜயை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார். விஜயை போன்ற சில டைரக்டர்கள் பற்றியும் பிரியங்கா தனது புத்தகத்தில் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

பாடல் பாடிய பிரியங்கா
மஜித் இயக்கிய தமிழன் படத்திற்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்ததுடன், இமான் இசையமைத்த உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலையும் பிரியங்கா, விஜய்யுடன் சேர்ந்து பாடி இருந்தார்.


Click it and Unblock the Notifications











