பிரியங்கா சோப்ராவின் அனுஜா குறும்படம்.. ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் நுழைந்து அசத்தல்!
மும்பை: 97வது ஆஸ்கர் விருதுகள் விழா வரும் மார்ச் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியல் இன்று மாலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் அனுஜா என்ற இந்திய குறும்படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் ரேசில் பங்கேற்ற லபடா லேடிஸ் தேர்வாகவில்லை. இதேபோல மிகவும் எதிர்பார்ப்பிற்கிடையில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் அனுஜா குறும்படம் தேர்வாகும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆஸ்கர் விருதுகள் 2025: 2025 ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் இன்று மாலை முதல் வெளியிடபட்டுள்ளது. இதில் அனுஜா என்ற இந்திய குறும்படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தமாக 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு அனுஜா குறும்படம் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கத்தில் இந்த குறும்படம் உருவாகியுள்ளது. குழந்தை தொழிலாளர்களின் பிரச்சனையை இந்த குறும்படத்தின் கதைக்களமாக கொண்டுள்ளார் ஆடம். இந்திய அளவில் ஆஸ்கர் பட்டியலில் எந்த பிரிவிலும் எந்த படமும் இடம்பெறவில்லை.
இந்தியாவின் நம்பிக்கை: முன்னதாக ஆஸ்கர் ரேசில் பங்கேற்ற லாபடா லேடீஸ் படம் தேர்வாகவில்லை. இதேபோவ கான்ஸில் விருது வென்ற மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படமும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக அனுஜா படம் தற்போது ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இணைந்துள்ளது. இந்தப் படத்தை குனீத் மோங்கா கபூர் தயாரித்துள்ள நிலையில், இவர் கடந்த 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஆவணப்படமாக தேர்வான தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர். இவர்தான் தற்போது அனுஜா படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.
அனுஜா குறும்படம்: மேலும் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த குறும்படத்தின் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார். எனவே இந்த குறும்படம் இந்தியாவின் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 2ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், எந்தப் படங்கள் விருதுகளை அதிகளவில் தட்டித் தூக்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச சினிமா ரசிகர்களிடையே காணப்படுகிறது.
குழந்தை தொழிலாளர் பிரச்சினை: அனுஜா குறும்படம் சர்வதேச அளவில் பிரச்சினைக்குள்ளாகியுள்ள விஷயத்தை கையிலெடுத்துள்ளது. தன்னுடைய அக்கா பாலக்குடன் ஒரு பின்தங்கிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 9 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்த குறும்படம் பேசுகிறது. அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாழ்க்கையையே மாற்றும் ஒரு முடிவு குறித்தும் இந்த குறும்படம் அடுத்தடுத்த காட்சிகளில் கூறுவதாக அமைந்துள்ளது. ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இணைந்துள்ளதால் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்த குறும்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











