ஸ்நாக்ஸிற்காக அழுத பிரியங்கா... கலாய்த்து சேவ் செய்த கமல்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 27 நாட்களாக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தை நிறைவு செய்யப் போகிறது.

முதல் வாரத்தில் மருத்துவ காரணங்களால் நமிதா மாரிமுத்து தானாக போட்டியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கும், மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜாவும் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் நான்காவது வாரத்தில் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இவர்களில் வருண், அக்ஷரா, பாவனி ஆகியோர் காயின் வைத்திருந்தும் அதை பயன்படுத்தி, நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டனர்.

இரண்டு பேர் சேவ்ட்

இரண்டு பேர் சேவ்ட்

வழக்கமாக சனிக்கிழமை எபிசோட்டில் காப்பாற்றப்படுபவர்களின் பெரும்பாலான பெயர்களை கூறி விடுவார் கமல். ஆனால் நேற்றைய எபிசோடில், அப்படி செய்யாமல் நிகழ்ச்சியை முடிக்க போகும் சமயத்தில் இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி காப்பாற்றப்படுவதாக மட்டும் கூறி சென்றார். இதனால் மீதமுள்ள 7 பேரில் யார் வெளியேற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

7 பேர் எலிமினேஷனில்

7 பேர் எலிமினேஷனில்

டேஞ்சர் ஜோனில் சின்ன பொண்ணு, அபினய், சுருதி ஆகியோர் இருப்பதாகவும், இவர்களில் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இசைவாணி மற்றும் அண்ணாச்சி காப்பாற்றப்பட்டதால் தற்போது எலிமினேஷனில் வருண், அபினய், அக்ஷரா, சின்ன பொண்ணு, பாவனி, சுருதி, பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.

ஸ்நாக்ஸிற்காக அழுதவர்

ஸ்நாக்ஸிற்காக அழுதவர்

இந்நிலையில் இன்றைய 28 ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கமாக நடக்கும் லிவ்விங் ஏரியாவில் அல்லாமல், நாமினேட் ஆனவர்களை ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு கூப்பிட்டு பேசுகிறார் கமல். இந்த ப்ரோமோவில், நேரடியாக பாயிண்டுக்கு வருவோம். ஒருவர் வெளியேற்றப்படுவார். அது யாருன்னு நீங்களே புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். வீட்டு ஞாபகம் வந்து அழுதவங்கள நாம பார்த்திருக்கோம். ஆனால் ஒருவர் ஸ்நாக்ஸ் ஞாபகம் வந்து அழுதிருக்காங்க என்கிறார் கமல்.

பிரியங்கா சேவ்ட்

பிரியங்கா சேவ்ட்

அப்போது பிரியங்கா வேகமாக எழுந்து வருகிறார். அதற்குள் கமல், இருங்க. நீங்க எழுந்ததும் நான் ஆமாம் என்று சொல்லி விட்டால், இவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று சொல்லி விட்டு, கையில் இருக்கும் கார்டை திறந்து பார்க்கிறார். பிறகு, பிரியங்கா...யு ஆர் சேவ்ட் என்கிறார். பிரியங்கா உதட்டை ஒது மாதிரியாக வைத்து அழுகை கலந்த சிரிப்பில் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

பிரியங்கா சேவ் ஆனதால் அதை பாராட்டி, அதிகமான ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அனைவரின் ஓட்டும் பிரியங்காவிற்கு தான். ஸ்நாக்ஸ் ஞாபகம் என்றதுமே பிரியங்காவின் கண் கலங்குகிறது. இந்த வாரம் சின்ன பொண்ணு அக்கா தான் எவிக்ஷன் என பதிவிட்டு, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X