»   »  உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?

உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகின் 2வது மிக அழகான பெண்ணாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பஸ்நெட் என்னும் சோஷியல் மீடியா நெட்வொர்க் உலகின் அழகான பெண்கள் யார் என்று ரசிகர்களிடையே ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது.

தற்போது அந்த வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 அழகான பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பியான்ஸே நோலஸ்

பியான்ஸே நோலஸ்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தான் உலகின் மிக அழகாக பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை இந்திய நடிகை பெற்றுள்ளார்.

பிரியங்கா

பிரியங்கா

உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார். இதனால் பிரியங்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

மாடலும், விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சலுமான டெய்லர் ஹில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நடிகை எம்மா வாட்சன் நான்காவது இடத்திலும், டகோடா ஜான்சன் 5வது இடத்திலும், ஹில்லாரி கிளிண்டன் 6வது இடத்திலும் உள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி

ஏஞ்சலினா ஜூலி

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 7வது இடத்திலும், இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற எம்மா ஸ்டோன் 12வது இடத்திலும் உள்ளனர்.

English summary
Priyanka Chopra has defeated famous personalities like Angelina Jolie, Emma Watson, Blake Lively and Michelle Obama to become the second most beautiful woman in the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil