கல்யாணமாகி ஒரு வருஷம் தானே ஆச்சு.. அதுக்குள்ள தனியா ஜோடி போட்டு சுத்தும் பிரியங்கா, பாவனி ரெட்டி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ் பாண்டே, பாவனி ரெட்டி, அமீர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். வீட்டிற்குள் நல்ல நட்புடன் இருந்த இவர்கள் வெளியில் வந்த பிறகும் அதே நட்புடன் பழகி வருகின்றனர். தற்போது, பிரியங்கா தேஷ் பாண்டே, பாவனி ரெட்டி இருவர் மட்டும் தனியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் வைல்ட் கார்டு போட்டியாளராக அமீர் என்ட்ரி கொடுத்தார். அந்த வீட்டிற்கு அமீர் வந்ததுமே பாவனி காதலிப்பதாக சொல்லி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தார். ஆனால், பாவனி காதலை ஏற்றுக்கொள்ளாமல் நோ சொல்லிக்கொண்டே இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும், பிக் பாஸ் ஜோடிகள் 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அமீர் பாவனி ஜோடி வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

Priyanka pavani reddy thirupathi
Photo Credit:

நல்ல நட்பு: அமீருக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால், பிரியங்கா அக்கா முறையில் இருந்து அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, துணைப் பெண்ணாக முடிச்சு போட்டு வாழ்த்தினார். இந்த போட்டோவை பார்த்த பலரும் இவர்களின் நட்பை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அதே போல, பிரியங்கா தேஷ் பாண்டே திருமணத்திலும் பாவனி, அமீர் கலந்து கொண்டனர். யாருக்கும் சொல்லாமல் காதும் காதும் வைத்தது போல நடந்த பிரியங்காவின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருந்தனர். அப்படி நெருங்கிய நட்பு பட்டத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் கலந்து கொண்டது இவர்களின் தூய்மையான நட்பை காட்டுகிறது.

திருப்பதியில் சாமி தரிசனம்: தற்போது, பிரியங்கா தேஷ் பாண்டே, பாவனி ரெட்டி இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலுக்கு வந்த பிரியங்கா மற்றும் பாவனியை, திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் மரியாதையுடன் வரவேற்றனர். கோவில் அதிகாரிகள் அவர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கி சிறப்பு மரியாதை செய்தனர். இருவரும் எளிமையான பாரம்பரிய உடையில், முகத்தில் அமைதியான புன்னகையுடன் சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோவை பார்த்த இணையவாசிகள், கல்யாணமாகி ஒருவருஷம் தானே ஆச்சு, அதுக்குள்ள என்ன புருஷனா விட்டுக்கு ஆன்மிக பயணம் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X