புதுசா கொளுத்திப்போடுவேன்னு நினைச்சி கூட பார்க்கலையேடா ஒரு கண்ணா.. பிக் பாஸை கலாய்க்கும் பிரியங்கா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் கடந்த ஆண்டை போல தாமதமாக அக்டோபர் மாதம் ஆரம்பமான நிலையில், இந்த சீசனிலும் ஏகப்பட்ட பண்டிகை கொண்டாட்டம் தான் அரங்கேறும் என ரசிகர்கள் அப்செட்டாகி இருந்த நிலையில், அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஏதோ புதுசா கொளுத்திப் போட பிக்பாஸ் திட்டமிட்டுள்ள முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸின் மைண்ட் வாய்ஸை அழகாக கேட்ச் செய்த பிரியங்கா பிக் பாஸை பங்கமாக கலாய்க்கும் இன்றைய முதல் புரமோ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் இன்றைக்கு போடப் போகும் நாடகம் எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நாரதர் வேலை

நாரதர் வேலை

இந்த சீசன் ஆரம்பித்து இன்னும் நாரதர் வேலையை நம்ம பிக் பாஸ் ஆரம்பிக்கவில்லையே வெறும் அழுகாச்சி சீரியலே ஓடிக் கொண்டிருக்கிறதே என ஏங்கிப் போய் காத்திருந்த ரசிகர்களுக்கு காதில் இன்பத் தேன் வந்து பாயும் விதமாக பிக் பாஸ் ஈடுபாடு குறைவு மற்றும் ஈடுபாடு அதிகமான போட்டியாளர்கள் குறித்து பிக் பாஸ் குழு முடிவு செய்ய வேண்டும் என கொளுத்திப் போட்டுள்ளார்.

விஜயதசமி கொண்டாட்டம்

விஜயதசமி கொண்டாட்டம்

போன சீசனில் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி எல்லாம் அழகாக பர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திய நிலையில், இந்த சீசன் விஜயதசமி கொண்டாட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் கம்பேர் பண்ணி கருத்து சொல்ல ரசிகர்கள் ஆர்வமுடன் வெயிட்டிங்.

ஒரு கண்ணா

ஒரு கண்ணா

ஒற்றை கண் கேமரா மூலம் பிக் பாஸ் போட்டியாளர்களை 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸை "விஜயதசமி அதுவுமா புதுசா கொளுத்திப்போடுவேன்னு நினைச்சி கூட பார்க்கல ஒரு கண்ணா" என பிரியங்கா பங்கமாக வச்சி செய்துள்ள முதல் புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

மரியாதையே இல்லை

மரியாதையே இல்லை

குருநாதா, பிக் பாஸ், வாத்தியாரே என மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த பிக் பாஸை இந்த சீசனில் பிரியங்கா கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்காமல் நைட்டி திருடன், பெரிய பாசு மற்றும் ஒரு கண்ணா என நக்கலடித்து வருவது பல ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் புதுசா இருக்கே என ரசித்து வருகின்றனர். சிலர் பிரியங்காவின் அடாவடிக்கு எதிராகவும் கமெண்ட்டுகளை போட்டு திட்டி வருகின்றனர்.

நாடகம் எப்படி இருக்குமோ

நாடகம் எப்படி இருக்குமோ

தாமரை செல்வி தலைமையில் ராஜுவின் கை வண்ணத்தில் உருவாகப் போகும் விஜயதசமி நாடகத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் எப்படி ஃபேன்ஸி டிரெஸ் காம்படீஷனில் கலந்து கொண்ட குழந்தைகள் போல சொதப்போ போறாங்களா? இல்லை கடந்த சீசனில் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியது போல நடிப்பில் மிரட்டப் போறாங்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

அண்ணாச்சிக்கு எதிராக

அண்ணாச்சிக்கு எதிராக

அபிஷேக் ராஜா அண்ணாச்சியை ஏற்கனவே மரியாதை குறைவாக பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கிளம்பி வரும் நிலையில், புரமோவின் இறுதியில் அண்ணாச்சி வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ளார் என்றும் அவரது காமெடி எதுவும் எடபடவில்லை என்றும் அபிஷேக் ராஜா பேசுவது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

நல்ல வேலை

நல்ல வேலை

போன சீசன் போல மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை 4 மணி நேரத்துக்கு லெந்தா போகாமல் விஜயதசமி ஸ்பெஷலையும் இரவு 10 மணி முதல் 11 மணிக்கு வைத்ததே நல்ல விஷயம் என பிக் பாஸ் ரசிகர்கள் பெரிய கும்பிடாக போட்டு கும்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X