ஒருத்தரை பிடிக்கலைனா சாக்கடையில தள்ளிடுவா? பிரியங்கா முகத்திரையை கிழித்த நிரூப்!
சென்னை: சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும், பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இணையவாசிகள் உட்பட, அந்த சேனலில் வேலை பார்த்தவர்கள் கூட மணிமேகலைக்கு ஆதரவாக தான் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப், பிரியங்கா குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் டிடிக்கு அடுத்து அந்த சேனலின் செல்லப்பிள்ளையாக பிரியங்கா இருந்து வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், அதை கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் கொண்டு சென்று வருகிறார். தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக இருந்து சமைத்து அசத்தி வருகிறார். சீசன் 5 டைட்டிலை பிரியங்கா பெற்றதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடனான சண்டை காரணமாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை வெளியேறினார்.

தொடர்ந்து தொல்லை: மணிமேகலைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், நான் மட்டும் தான் பெரிய ஆங்கர் என்ற நினைப்போடு, மணிமேகலையை டார்ச்சர் செய்ததாகவும், மணிமேகலை தனது வீடியோவில் கூறியிருந்தார். மேலும், நான் படித்துக்கொண்டு இருக்கும் போதே ஆங்கராக பணியாற்றி கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். நான் எங்க போனாலும் பொழச்சிப்பேன், உங்களுக்குத்தான் இந்த சேனலை விட்டால் வேறுவழியில்லை என்பது போல கூறியிருந்தார்.
பிரியங்காவின் உண்மை முகம்: மணிமேகலையின் இந்த குமுறலுக்கு விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் சிலர் மறைமுகமாகி ஆதரவளித்து வருகிறார்கள். அதே போல இணையவாசிகள் பலர், பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே, இதே போலத்தான் வன்மத்தோடு நடந்து கொண்டார். அபிஷேக், நிரூப் என இவர்கள் மூவரும் கூட்டு சேர்ந்து விளையாடினார்கள். அதுமட்டுமில்லாமல், பாவனியை ஏற்றிவிட்டு ராஜூவிடம் சண்டை போடவைத்தார். இப்படி மறைமுகமாக பல வேலைகளை அவர் செய்து இருக்கிறார். இதற்கு உதாரணம் இந்த வீடியோவை பாருங்கள் என்று பிக் பாஸ் வீட்டில் நிரூப் பேசிய வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
உண்மைதான்: அந்த வீடியோவில் நிரூப், நீ ஒரு சரியான செல்பிஷ், அடுத்தவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைத்து, அந்த கஷ்டத்தை கொண்டாட வேண்டும் என்று நினைக்கிற ஒரே ஆள் நீ தான். உனக்கு ஒருத்தருடன் பிரச்சனை இருந்தா, அவங்களை சாக்கடையில் தள்ளிவிட்டு புதைச்சிவிட்டுடுவ. தாமரையை அப்படித்தான் செய்த என்று நிரூப் அதில் ஆவேசமாக பேசி உள்ளார். இதைப்பார்த்த அனைவரும் நிரூப் சொன்னது அனைத்தும் உண்மை தான் பிரியங்கா அப்படிப்பட்டவர் தான் என அந்த வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











