பிரியங்கா, நிரூப் இடையே திடீர் சண்டை... கடுப்பான ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இசைவாணி அவர் வைத்திருந்த நெருப்பு நாணயத்தை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரானார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் நடைபெற்றது. பொம்மலாட்டம் என தலைப்பு வைக்கப்பட்ட இந்த போட்டி கார்டன் ஏரியாவில் நடைபெற்றது.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 போட்டியாளர்களின் பெயர் கொண்ட சோளக்காட்டு பொம்மை போல வைக்கப்பட்டு இருந்தது.

பொம்மையை உடைக்கலாம்
யார் தலைவராக இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையோ அந்த பொம்மையின் தலையை உடைக்க வேண்டும். மேலும், தலைவர் பதவியில் போட்டியிடும் நபர், தலைவரானால் என்ன எல்லாம் செய்வேன் என்று கூறி பொம்மையை பாதுகாக்கலாம். இறுதியில் எந்த நபரின் பொம்மை உடையாமல் இருக்கிறதோ அவரே பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் ஆவார்.

கேப்டனாக வாய்ப்பு வேண்டும்
இதையடுத்து, கார்டன், ஏரியாவில் இந்த டாஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பேசிய பிரியங்கா எனக்கு இந்த முறை கேப்டனாக ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்தால், 13 பேரும் சிறப்பாக செயல்படும் ஒரு யுத்தியை நான் வைத்திருக்கிறேன் என்றார்.

காரசார விவாதம்
அப்போது குறுக்கிட்ட, நிரூப் அப்படி என்ன யுக்தி என்று கேட்டார். இதனால் கடுப்பான பிரியங்கா அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நீ மட்டும் வோட்டு போட்டு, நான் தேர்வாக போவதில்லை, எப்போதும் நான் பேசுவதை மட்டுமே கார்னர் செய்து பேசுற, அது எனக்கு காண்டு ஆகுது என்றார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரசாரமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் மினி அன்பு டீமாக செயல்பட்டுக்கொண்டு இருந்த இவர்கள், இப்பொழுது எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

இந்தவார கேப்டன்
பொம்மலாட்ட டாஸ்கில் கடைசிவரை உடையாமல் இருந்த அபினய் இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நெருப்பு நாணயத்தை வைத்திருந்த இசைவாணி, இந்த வீட்டில் நான் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறி, அபினய்யின் தலைவர் பதவியை தட்டிப்பறித்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார் இசைவாணி.


Click it and Unblock the Notifications











