குக் வித் கோமாளி வின்னர் பிரியங்கா.. விட்டுக்கொடுக்காத விஜய் டிவி.. மணிமேகலை கோபத்துக்கு நோ மதிப்பு
சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடந்திருக்கின்றன. இந்த ஐந்து சீசன்களிலேயே இப்போது முடிந்திருக்கும் சீசன் சர்ச்சைகளை அதிகம் சம்பாதித்தது. ஒருபக்கம் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற; மறுபக்கம் பிரியங்கா ரொம்ப டாமினேஷன் செய்கிறார் என்று சொல்லி ஆங்கராக இருந்த மணிமேகலையும் வெளியேறினார். சூழல் இப்படி இருக்க குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னராக பிரியங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் ஹிட்டடிப்பது வழக்கம். அந்த ஷோக்களில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. ஐந்து சீசன்கள் இதுவரை நடந்து முடிந்திருக்கின்றன. கோமாளிகளாக பிரபலங்கள் சமையலறையில் சமையலோடு செய்யும் அலப்பறைகள் ட்ரெண்டாவது வழக்கமாகியிருந்தது. அப்படித்தான் இந்த ஐந்தாவது சீசனும் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேசமயம் சில சர்ச்சைகளும் இந்த சீசனில் பெரும் பேசுபொருளாக மாறின.

வெங்கடேஷ் பட் வெளியேறல்: முதன்முதலாக இந்த ஷோவில் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் இதிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் டிவியிலிருந்து வெளியேறிய வெங்கடேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றுவிட்டார். வெங்கடேஷ் வெளியேறியதையே ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பவில்லை. அப்போதிருந்தே குக் வித் கோமாளி 5ல் சர்ச்சையின் முதல் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
பிரியங்கா Vs மணிமேகலை: அதனையடுத்து நான்கு சீசன்களில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை இந்த சீசனில் தொகுப்பாளினியாக மாறினார். ஆனால் அவரும் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறினார். முக்கியமாக தனது ஆங்கரிங் பணியில் பிரியங்கா ஓவர் டாமினேஷன் செய்வதாக ஓபனாக கூறினார். அந்த விஷயத்தில் ஒருதரப்பினர் மணிமேகலைக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் நின்றனர். மேலும் மணிமேகலையோ பிரியங்கா ஆதரவாளர்களை கலாய்த்து தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டுவந்தார்.
வின்னர் பிரியங்கா: சூழல் இப்படி இருக்க நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் பிரியங்கா, இர்ஃபான், ஜோயா, விடிவி கணேஷ், பூஜா, சுஜிதா என ஆறு பேர் பங்கேற்றனர். இதில் பிரியங்காவை டைட்டில் வின்னராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ராமருக்கு கோமாளியாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாவது பரிசை சுஜிதா - புகழ் ஜோடி வென்றிருக்கிறது. அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
விட்டுக்கொடுக்காத விஜய் டிவி: அதேபோல் குரேஷிக்கு சிறப்பு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் நடந்த சண்டை பெரும் விவாதமானது. முக்கியமாக விஜய் டிவியில் பிரியங்கா வைத்ததுதான் சட்டமா என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பினார்கள். மேலும், இந்த சீசனில் பிரியங்காவை டைட்டில் வின்னராக அறிவித்தால் மேற்கொண்டு விவாதங்கள் எழும் அதனால் அவரை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆனால் இப்போது பிரியங்கா டைட்டில் வின்னராகியிருப்பதை பார்த்த அவர்கள்; என்னதான் இருந்தாலும் பிரியங்காவை விஜய் டிவி விட்டுக்கொடுக்கவில்லையே. அப்போ மணிமேகலையின் கோபத்துக்கு மதிப்பே இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











