தாயின் தொடர் வலியுறுத்தல்?.. இரண்டாவது திருமணம் செய்கிறாரா விஜே பிரியங்கா?
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5க்குள் இருக்கும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் இப்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா. கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளியவர். தனது நகைச்சுவைத்தனமான பேச்சாலும், டைமிங் காமெடிகளாலும் நிகழ்ச்சியை போர் அடிக்காமல் நகர்த்தி செல்வார். தொகுப்பாளர் மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் ஒரு படத்தில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது ஆங்கர் பணியை சிறப்பாக தொடர்ந்துவருகிறார் ப்ரியங்கா.
கஷ்டம்: பிரியங்காவுக்கு 11 வயது இருக்கும்போது அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். அதற்கு பிறகு அவரும், அவரும் சகோதரரும் தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தார்கள். இப்போது படு ஜாலியாக இருக்கும் பிரியங்கா தன்னுடைய இளம் பருவத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவர் ஒருவரை தீவிரமாக காதலித்துவதார்.
திருமணம்: பிரியங்காவின் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. ஆனால் சமீப காலமாக அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும்; இதன் காரணமாக அவர் தனது தாயின் வீட்டில்தான் வசித்துவருகிறார் என்றும் பல தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் பிரியங்காவோ இதுவரை அமைதியே காத்துவருகிறார்.
இரண்டாவது திருமணம்: இந்நிலையில் பிரியங்கா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது தனியாக இருக்கும் பிரியங்காவிடம் அவரது தாய் கடந்த சில காலமாகவே இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்திவந்ததாகவும்; அதற்கு ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளாத பிரியங்கா இப்போது மனம் மாறி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











