மீண்டும் நெல்சன் உடன் வெளிநாட்டில் டூர் அடிக்கும் பிரியங்கா மோகன்.. தீயாக பரவும் லேட்டஸ்ட் போட்டோ!
சென்னை: Priyanka Mohan - நடிகை பிரியங்கா மோகன் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவில்லை என்றாலும். தொடர்ந்து குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் தென்பட்ட நடிகை பிரியங்கா மோகன் பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு நெல்சன் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்ற நிலையில் பிரியங்கா மோகனும் உடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரியங்கா மோகன் டூர் எடுத்து வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அழகு செல்லம்மா: டாக்டர் படத்தில் அழகு செல்லமாக வளம் வந்த பிரியங்கா மோகனுக்கு தென்னிந்திய சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். டாக்டர் படத்தை முடித்த கையோடு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன். விரைவில் வெளியாக உள்ள பவன் கல்யாணின் ஓஜி படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் உடன் லண்டனில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி 600 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்திய இயக்குநர் நெல்சன் தற்போது லண்டனில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செய்து வருகிறார்.
ஏற்கனவே நெல்சன் துபாய் டூர் போனபோது, கவின் மற்றும் பிரியங்கா மோகன் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில் தற்போது லண்டனுக்கு நெல்சன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் நடிகை பிரியங்கா மோகனும் உடன் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜாலி டூர்: நெல்சனின் மனைவி மோனிஷாவின் நெருங்கிய தோழியாகவே மாறிவிட்டார் பிரியங்கா மோகன் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுடன், ஜெயிலர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்டோரும் லண்டன் சென்றுள்ளனர்.
கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை வைத்து நல்ல ஜாலியாக வெளிநாட்டில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணிட்டு வந்து அடுத்த படத்தின் ஆரம்பிக்கும் முடிவில் நெல்சன் உள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில் நடிகை பிரியங்கா மோகனும் விடுமுறையை நெல்சன் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











