Thalaivar 173: டான் ஹீரோயின் பிரியங்கா மோகன் மட்டுமில்லை.. தலைவர் 173ல் இந்த பராசக்தி நடிகரும் ஆஜர்?
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் நெசல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 174 படத்தின் ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
47 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் உடன் மீண்டும் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பதை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அதற்கு முன்னதாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 173 படம் குறித்த சில அப்டேட்கள் கசிந்து வைரலாகி வருகின்றன.
இந்த வயதிலும் செம ஸ்பீடு: 74 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து நடித்து வருவதை பார்த்து பல இளம் நடிகர்கள் உத்வேகமாகவும் பாடமாகவும் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் ரெஸ்ட் எடுக்காமல் ஷூட்டிங் ஸ்பாட் ஓடவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. கூலி படத்தை முடித்தக் கையோடு ஜெயிலர் 2 படத்தில் நடித்த ரஜினிகாந்த் தலைவர் 173 மற்றும் RK x KH படத்தில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.
மகளாக பிரியங்கா மோகன்: தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்தின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனை நடிக்க வைத்த சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்திலும் அவருக்கே வாய்ப்புக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராசக்தி பட நடிகர்: இந்நிலையில், பிரியங்கா மோகன் மட்டுமின்றி பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசப்பும் தலைவர் 173 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பேசில் ஜோசப் தலைவர் 173 படத்திலும் நடித்தால் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய சீக்கிரமே தலைவர் 173 படத்தின் தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறுகின்றனர். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைவர் 173 படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு கமல்ஹாசன் உடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications