கவின், நெல்சன், ரெட்டின் கிங்ஸ்லி.. பிரியங்கா மோகன் துபாயில் செம ஃபன் போல.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: இயக்குநர் நெல்சன், நடிகர் கவின் மற்றும் அவர்களது காமெடி கேங் உடன் பிரியங்கா மோகனும் துபாயில் ஜாலி டூர் அடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
பீஸ்ட் படத்தை முடித்த நிலையில், அடுத்ததாக தலைவர் 169 படத்தை இயக்கப் போகும் நெல்சன் அதற்கு முன்பாக ஃபாரின் டூரை தனது ஜாலியோ ஜிம்கானா கேங் உடன் கொண்டாடி வருகிறார்.

விஜய்யிடம் கோரிக்கை
பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக சன் டிவியில் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்தார். அப்போது, ஒரு வேளை பீஸ்ட் படம் ஹிட் ஆகிடுச்சுன்னா, எங்க எல்லாரையும் ஏதாவது ஃபாரினுக்கு டூர் கூட்டிட்டுப் போவீங்களா என கோரிக்கை வைத்தார். அதற்கு, ஜாலியாக நான் தனியா போய்க்கிறேன், நீங்க தனியா போங்க என சொன்னார். இந்நிலையில், தற்போது தனது குழுவுடன் துபாயில் ஜாலி டூர் அடித்து வருகிறார் நெல்சன்.

பிரியங்கா மோகனும்
டாக்டர் படத்தில் இருந்தே இயக்குநர் நெல்சன் கேங்கில் உறுப்பினராகி விட்டார் பிரியங்கா மோகன். பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா ஷூட்டிங் மற்றும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் என அனைத்திலும் அவர் கலந்து கொண்டார். டான் படத்தின் ரிலீசுக்கு கூட வராமல் நெல்சன் கேங் உடன் துபாயில் ஜாலி டூர் அடித்து வருகிறார்.

நெல்சன் உடன்
இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது மனைவி மோனிஷா நெல்சன், நடிகர் கவின், ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்ட பலருடன் துபாய் டூருக்கு சென்றுள்ளார் பிரியங்கா மோகன். டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ள பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

ரெட்டின் கிங்ஸ்லியுடன் டான்ஸ்
துபாய்க்கு டூர் சென்றுள்ள நிலையில், அங்கே குருப்பாக இவர்கள் அடிக்கும் லூட்டிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். டாக்டர், பீஸ்ட் படங்களில் காமெடியனாக கலக்கிய ரெட்டின் கிங்ஸ்லியுடன் பிரியங்கா மோகன் ஆடும் டான்ஸ் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்துகிறது.

கவின் கிட்ட என்ன கேட்கிறார்
பிக் பாஸ் கவினும் இயக்குநர் நெல்சனும் நெருங்கிய நண்பர்கள். பீஸ்ட் படத்தின் பூஜைக்கே கவின் கலந்து கொண்டார். இந்நிலையில், துபாய் டூருக்கும் அவர் சென்றுள்ள நிலையில், பிரியங்கா மோகன் உடன் போனை காட்டி ஏதோ பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கே நெல்சன் வருவதுடன் அந்த வீடியோ கட் ஆகி அடுத்த இடத்திற்கு செல்கிறது.
நெல்சன் மனைவி
இந்த சம்மருக்கு வெறும் ஏற்காடு டூர் மட்டும் தானா? என ஏங்கிக் கொண்டிருந்த மோனிஷாவை துபாய்க்கு இப்படியொரு காமெடி கேங் உடன் டூருக்கு கூட்டிட்டுப் போய் செம ஹேப்பி ஆக்கி உள்ளார். பிரியங்கா மோகனுடன் அவரும் மினி டிரெஸ்சில் ஆட்டம் போடுவதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது


Click it and Unblock the Notifications











