சூப்பர் ஹீரோக்களோட ஜாய்ன் ஆகும் டாக்டர் நாயகி... அடுத்ததா யாரோட ஜோடின்னு பாருங்க!
சென்னை : டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா மோகன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த இவரது நடிப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா அருள் மோகன் நானி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த டாக்டர் படத்திலும் நடித்திருந்தார்.

டாக்டர் படத்தில் அறிமுகம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் அவர் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அடுத்ததாக டான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்தமாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

டான் படத்தில் ஜோடி
இந்த ஜோடி முன்னதாக இணைந்து நடித்திருந்த டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சூர்யாவுடன் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் பிரியங்கா.

சூர்யாவுடன் சூப்பர் கெமிஸ்ட்ரி
இந்தப் படத்தின் சூர்யா -பிரியங்கா மோகன் இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்திலும் பிரியங்கா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஜெயம் ரவியுடன் ஜோடி
இந்நிலையில் ஜெயம் ரவியின் 30வது படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அவரது கமிட்மெண்ட் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழகு + திறமை
அழகாகவும் திறமையாகவும் காணப்படுகிறார் பிரியங்கா மோகன். அவருக்கு நடிப்பும் கைகூடி வருகிறது. முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளார். தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து தனக்கு கிராமத்து கெட்டப்பும் சிறப்பாக வரும் என்று நிரூபித்துள்ளார். தொடர்ந்து சூப்பர்ஸ்டார் மற்றும் ஜெயம் ரவியுடனும் இணையவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











