‘பொன்னியின் செல்வன்’ ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்: அசத்தலாக வெளியானது அபிஸியல் அப்டேட்!
சென்னை: தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'கேங் லீடர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்', 'டான்' படங்களிலும், சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் நடித்திருந்தார்.
ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் பிரியங்கா முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

செல்லம்மா செல்லம்மா
தெலுங்கு டாப் ஸ்டார் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதில், அவருக்கு ஜோடியாக அறிமுகமான பிரியங்கா மோகன், அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களிலும் தனது பயணத்தை தொடங்கினார். சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணியில் வெளியான 'டாக்டர்' படத்தில், வெள்ளந்தியான கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேநேரம், 'செல்லம்மா செல்லம்மா' பாடல் மூலம், ரசிகர்களின் ஃபேவரைட்டாகவும் மாறினார்.

சூர்யாவுடன் சூப்பர் ஜோடி
'டாக்டர்' படத்தை தொடர்ந்தும் சிவகார்த்திகேயனின் 'டான்' மூவியில் காலேஜ் குயினாக வந்து, கலர்ஃபுல்லாக ஸ்கோர் செய்திருந்தார். சிவகார்த்திகேனுடன் காதல், ரொமான்ஸ் என பிரியங்காவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல், சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் கமிட் ஆகிருந்தார். இந்தப் படத்தில் பிரியங்காவின் கேரக்டர் தான் எதற்கும் துணிந்ததாக அமைந்தது.

சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில்
தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விட வேண்டும் என தீயாக வேலைப் பார்த்து வருகிறார் பிரியங்கா மோகன். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில், இவரும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதால், கண்டிப்பாக பிரியங்கா மோகன் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே, ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் ஹீரோவுடன் கமிட்டட்
'ஜெயிலர்' படத்தில் பிரியங்கா மோகன் கமிட் ஆனது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், அவரது அடுத்த படம் குறித்து சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருள்மொழி வர்மானாக ஹீரோ ரோல் செய்துள்ள ஜெயம் ரவியின் 30வது படத்தில், அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதுகுறித்து படக்குழுவும் அபிஸியலாக அறிவித்துள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார் பிரியங்கா மோகன்.

அடடே இது சூப்பர் கூட்டணி
ஜெயம் ரவியின் 60வது படமாக உருவாகும் இதனை, ராஜேஷ் எம் டைரக்ட செய்கிறார். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என காமெடியில் வெரைட்டி காட்டின ராஜேஷ் எம், இப்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தில் நட்டியும் விடிவி கணேஷும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'JR 30' படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் கேரளாவில் தொடங்குவதாகவும், படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











