பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
சென்னை: நடிகர் சூர்யா ஜோடியாக, சிவகார்த்தியேன் பட ஹீரோயின் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படத்தில், சூர்யா மனைவியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

வாடிவாசல்
கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட், மோகன்பாபு, பரேஸ் ராவல் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். இதை அடுத்து, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தார். இதற்கிடையில் சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறன், இயக்குவதால், இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

ராஷ்மிகா மந்தனா
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட படமாக உருவாகும் இதன் கதை, கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேசி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

பிரியங்கா மோகன்
இப்போது, பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

நடிக்கத் தெரிந்த
ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. 'கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்பதால் நன்றாக நடிக்கத் தெரிந்த ஹீரோயின் வேண்டும் என்று சிலரை தேடி வருகின்றனர். இன்னும் முடிவாகவில்லை. பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என படக்குழு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











