ப்ரியங்கா, நிக் விவாகரத்து பெறுகிறார்களா?: தங்கை பரினீத்தி விளக்கம்

By Siva

மும்பை: ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து பெறப் போவதாக வெளியான செய்திகளை பார்த்து நடிகை பரினீத்தி சோப்ரா கோபம் அடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், கணவர் நிக் ஜோனஸும் விவாகரத்து பெறப் போவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

விவாகரத்து செய்தியை பார்த்துவிட்டு ப்ரியங்காவின் தங்கையும், நடிகையுமான பரினீத்தி சோப்ரா கடுப்பாகியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

நிக் ஜோனஸ்

நிக் ஜோனஸ்

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் பற்றி வெளியான செய்தி மோசமானது. எங்கள் வீட்டு விஷயங்கள் பற்றி வெளியாட்களிடம் நான் பேச விரும்பவில்லை. இது எங்கள் குடும்பத்திற்குள் தான் இருக்கும்.

விவாகரத்து

விவாகரத்து

ப்ரியங்கா பற்றி வெளியான செய்தி தவறானது. அதனால் தான் அவர்கள் அதை நீக்கிவிட்டனர். அப்படி இருக்கும்போது அது குறித்து நான் ஏன் ட்வீட் செய்ய வேண்டும். அந்த செய்தியில் உண்மை இல்லை.

திருமணம்

திருமணம்

நிக் பாரம்பரியத்தை மதிப்பவர். திருமணத்தின்போது நாங்கள் நிக்கிற்கு சர்பிரைஸ் கொடுக்க நினைத்தால் அவர் எங்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார். அவர் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து அசத்தினார்.

விளக்கம்

விளக்கம்

ப்ரியங்கா, நிக்கிற்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தபோது நான் மணப்பெண் தோழியாக இருந்தேன். அவர் எங்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்தார். அவர் என்ன கொடுத்தார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை என்றார் பரினீத்தி சோப்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X