திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு ப்ரியங்கா என்ன பரிசு கொடுக்கப் போகிறார் தெரியுமா?

By Siva

Recommended Video

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் கல்யாண வீடியோ | Priyanka Nick Wedding

மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு என்ன பரிசு அளிக்கப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். அவரின் திருமண நிகழ்ச்சிகள் 4 நாட்கள் நடைபெறுகிறது.

இதற்காக ஜோத்பூர் அரண்மையான உமைத் பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 2 முறை திருமணம்

2 முறை திருமணம்

டிசம்பர் 2ம் தேதி இந்து முறைப்படியும், 3ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் ப்ரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக சங்கீத் நிகழ்ச்சியில் ப்ரியங்கா தனது அம்மா மது சோப்ராவுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

மும்பை

மும்பை

திருமணத்தை அடுத்து டெல்லி மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிக் ஜோனஸ் குடும்பத்தார் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர்.

 பரிசு

பரிசு

திருமணத்திற்கு வருபவர்களுக்கு வெள்ளிக்காசு பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்களாம் ப்ரியங்காவும், நிக்கும். அந்த காசின் ஒருபக்கத்தில் NP என்றும், மறுபக்கத்தில் விநாயகர், லட்சுமி உருவம் இருக்குமாம். இந்த காசுகளை மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை தயார் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

 பொதுமக்கள்

பொதுமக்கள்

நிக்-ப்ரியங்காவின் திருமணத்தை முன்னிட்டு நேற்று முதல் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை உமைத் பவன் அரண்மனைக்குள் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நோட்டீஸ் அரண்மனைக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X