இதுதான்யா பிரண்ட்ஷிப்... வெளியில் வந்ததும் பிரியங்கா யாரை சந்தித்தார் தெரியுமா?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் 100 நாட்களில் வீட்டிலிருந்து காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே வந்த அடுத்த நிமிஷமே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர்.

மினி அன்பு டீம் அமைத்துக்கொண்டு அனைவரையும் மகிழ்வித்த பிரியங்கா வெளியே வந்ததும் யாரை சந்தித்தார் தெரியுமா?

நிரூப் பிரியங்கா சண்டை

நிரூப் பிரியங்கா சண்டை

பிக் பாஸ் 5வது சீசனிலும் மிக அதிகமாக சண்டை போட்டவர்கள் பிரியங்கா நிரூப் மற்றும் தாமரை. குறிப்பாக பிரியங்கா மற்றும் நிரூப்புக்கும் இடையே சண்டை நடக்கும் போது பார்க்கும் நமக்கே என்னடா இப்படி பேசிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும் அந்த அளவுக்கு இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள்.

கண்கலங்கிய பிரியங்கா

கண்கலங்கிய பிரியங்கா

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் கூட நிரூப் வெளியேற முக்கிய காரணமாக இருந்தவர் பிரியங்கா தான். இதனால் இவர்கள் இருவருக்கும் சண்டை உச்சத்தில் இருந்தது. பிரியங்காவுக்கு பிடிக்கலனா அவ, அப்படியே குழியில் தள்ளிவிடுவா என்று கூறி பிரியங்காவை கண்கலங்க வைத்தார். இது தவறு என கமல் சுட்டிக்காட்டியதை அடுத்து பிரியங்காவிடம் மன்னிப்பும் கேட்டார்.

விட்டு கொடுக்காத பிரியங்கா

விட்டு கொடுக்காத பிரியங்கா

என்னத்தான் சண்டைப்போட்டு வந்தாலும், நிரூப்பை பிரியங்கா எந்த இடத்திலும் விட்டு கொடுத்தது இல்லை. எப்போதும் என் நண்பன், நண்பன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார் பிரியங்கா. அவரின் உண்மையான அன்பை பார்த்து நிரூப்பும் நெகிழ்ந்து நீ அம்மாவைபோல என்று அன்பு பரிசும் அளித்தார்.

உள்ளே சண்டை வெளியில் நட்பா

உள்ளே சண்டை வெளியில் நட்பா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உ ள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் உள்ளே சண்டை வெளியில் வந்ததும் நட்பா... நீங்க எல்லாம் விளையாட்டை நல்ல விளையாடுனீங்க எங்களுக்குத்தான் அது விளையாட்டுனு புரியல என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X