நீ ஒரு கிறுக்கு… நீ ஒரு லூசு… ஜாலியான லூசு… தாமரையை நெகிழ வைத்த பிரியங்கா !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி என்னத்தான் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தாலும், அதில் பெரிசா எதுவும் கண்டெண்ட் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இதனால், ஊருவிட்டு ஊருவந்து, நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை, உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என ஒரு வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து வருகிறார் பிக் பாஸ்.
டாஸ்க்கிற்கு பெயர் வைக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நினைவுக்கும் அளவுக்கு டாஸ்க்கின் பெயர்கள் இருக்கின்றன.

கண்ணாடி டாஸ்க்
உள்ளதை உள்ளபடி காட்டும் டாஸ்க்கில், போட்டியாளர்கள் ஏ டீம் மற்றும் பி டீம் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இதையடுத்து, சிபி - அக்ஷரா, நிரூப் - அபிநய், இசைவாணி - அண்ணாச்சி, ஐக்கி - வருண், பாவனி - ராஜு, பிரியங்கா - தாமரை என ஜோடிகள் பிரிக்கப்பட்டு, ஒருவர் அசலாகவும் மற்றொருவர் அவரின் பிம்பமாகவும் செயல்பட்டனர்.

ஆரம்பம் சூப்பர்
நேற்று தொடங்கிய கண்ணாடி டாஸ்கில் ஆரம்பத்துல நிரூப் அபிநயை சரமாரியாக திட்டித்தீர்த்த்தார். அடடா பிக் பாஸ் செமயாக கொளுத்தி போட்டுள்ளார் என்று நினைச்சா, அடுத்ததா வந்த இசைவாணி அண்ணாச்சி பற்றி உப்பு சப்பு இல்லாமல் பேசிவிட்டார், இதையடுத்து வந்த சிபியும் அக்ஷரா பற்றி சொல்லும்படி எதுவும் பேசவில்லை. சோ இந்த டாஸ்க்கிலும் கண்டெண்ட் கிடைக்கவில்லை.

பாசத்திற்கு அடிமை
இதையடுத்து, பிம்பமாக செயல்பட்டவர்கள் உண்மையான உருவத்தை அதாவது தங்களின் ஜோடி பற்றி உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டும் என்கிற ட்விஸ்டில், தாமரை பற்றி கண்ணாடி முன் நின்று பிரியங்கா பேசினார். அதில், தாமரை செல்வி பாசத்திற்கு அடிமையானவர், அதேபோல நானும் பாசத்திற்கு அடிமையானவர் என்றார்.

நீ ஒரு ஜாலியான லூசு
சில நேரம் நீ வார்த்தையை விட்டுட்டு கத்துவா, அது மத்தவங்களை கஷ்டப்படுத்தும், அதை செய்யாதே அவங்க என்ன சொல்லுறாங்கனு கேளு, அவங்களையும் புரிஞ்சிக்கோ என்றார். மேலும், நீ ஒரு கிறுக்குத்தான்... நீ ஒரு லூசு தான்... ஆனால், நீ ஒரு ஜாலியான லூசு... மற்ற பெண்களுக்கு உதாரணமா இருக்கும் லூசு என்று தாமரை பற்றி மனதில் நினைத்து வைத்ததை பிரியங்கா அவரின் மனம் புண்படாதபடி அழகாக பேசினார்.


Click it and Unblock the Notifications











