தான் உண்டு தன் வேலை உண்டுனு… அடக்கிவாசிக்கும் பிரியங்கா !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் தற்போது பிரியங்கா இருக்கும் இடமே தெரியாமல் அடக்கிவாசித்து வருகிறார்.

அபிஷேக்குடன் சேர்ந்து கொண்டு பிரியங்கா செய்த சில விஷயங்களை பற்றி கமல் கடுமையாக தாக்கி பேசினார்.

கேப்டன் தேர்வின் போதும் மதுவிற்கே போட்டியாளர்கள் அதிக பந்துகளை வீசி அவரை வெற்றி பெற வைத்தனர். இதனால், பிரியங்கா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்.

மினி குரூப்

மினி குரூப்

நிரூப், அபிஷேக், பிரியங்கா 3 பேரும் மினி அன்பு டீமை அமைத்துக்கொண்டு எப்போதும் கூடி கூடி பேசிக்கொண்டே இருந்தனர். மற்ற போட்டியாளர்கள் புகார் கூறும் அளவுக்கு வீட்டில் அவர்களின் செயல்பாடு இருந்தது. அக்ஷரா ரெட்டி பேப்பரில் எழுதி மதுமிதாவுக்கு கொடுத்தார் என பிரியங்கா அவரிடம் ரகளை செய்தார். இதனால் இணையத்தில் அவரின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

கமல் சரமாரி தாக்கு

கமல் சரமாரி தாக்கு

இதையடுத்து, வந்த கமல், பிரியங்காவிடம் அக்ஷரா செய்தது போல் நீங்கள் செய்ததே இல்லையா என கேட்க, இல்லை சார் நான் யாருக்கும் எழுதி கொடுக்கவில்லை என கூறுகிறார். நீங்கள் நிரூப் கையில் எழுதி காட்டியதை நாங்கள் பார்த்தோம், அவர் செய்தது தவறு என்றால் இதும் தவறு தான். ரூல்ஸ் எல்லோருக்கும் ஒன்று தான். மற்றவர்களை நாம் விமர்சிக்கிறோம் என்றால் முதலில் நாம் சரியாக இருக்கிறோமா என பார்க்க வேண்டும் என கூறி பிரியங்காவை சரமாரியாக தாக்கிப் பேசினார்.

மன்னிப்பு கேட்ட பிரியங்கா

மன்னிப்பு கேட்ட பிரியங்கா

அதோடு விடுவார் என்று பார்தால், காயின் தேடுகிறேன் என்கிற பெயரில் சின்னபொண்ணு மீது எல்லைமீறியது மக்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது என்று கமல் விமர்சித்தார். பிரியங்கா நீங்க ஒரு தொகுப்பாளர், நீங்கள் நாம் இப்படி உட்காரனும், இப்படி சிரிக்கனும் என திட்டம் இருக்கும். உங்களுக்கு தெரியலையா அது அத்துமீறல் என்று, பார்ப்பவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லையா என கேட்டார். இதற்கு மன்னிப்பு கேட்ட பிரியங்கா இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.

தான் உண்டு தன் வேலை உண்டு

தான் உண்டு தன் வேலை உண்டு

இதையடுத்து, இந்த வாரம் பிரியங்கா வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகமே வரும் அளவுக்கு அடக்கிவாசித்து வருகிறார். நேற்றைய டாஸ்கின் போதும் மது சொன்னதையும், அதேபோல இசைவாணியிடமும் பவ்யமாக நடந்து கொள்கிறார். எதுக்குடா வம்பு நம்ப உண்டு... நம்ப வேலை உண்டு என்று இருக்கலாம் என்ற முடிவை பண்ணிவிட்டார் போலும் பிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X