என்னது பாவனி -அமீர் கல்யாணம் செஞ்சுக்க போறாங்களா... பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பாருங்க!

சென்னை : விஜய் டிவியில் சிறப்பான வரவேற்பை பெற்றது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தனர் பாவனி மற்றும் அமீர். அதற்கு காரணம் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை இறுதிவரை மறுத்து வந்தார் பாவனி.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்களை கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டாகவும் இந்த நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ரசிகர்களை கவர்ந்தது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

பிக் பாஸ் 5வது சீசன் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசன் சிறப்பாக அமைய முக்கியமான காரணமாக அமைந்தனர் பாவனி மற்றும் அமீர். இவர்கள் காதல் குறித்த தகவல்கள் அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது. அந்த சீசன் முடிந்தாலும் இவர்களின் காதல் குறித்த கிசுகிசுக்கள் மட்டும் தொடர்ந்து வருகிறது.

அமீர் -பாவனி காதல் கிசுகிசு

அமீர் -பாவனி காதல் கிசுகிசு

அமீர் தொடர்ந்து காதல் கோரிக்கைகளை வைப்பதும் அதை தொடர்ந்து பாவனி மறுப்பதும் தொடர்கதையாக உள்ளது. முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் முலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் பாவனி. இந்நிலையில் பிக் பாஸ் மற்றும் அமீர் உடனான காதல் கிசுகிசுக்களும் இவரை பிரபலமாக்கியுள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

தற்போது இந்த ஜோடி பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளர்களாக பங்கேற்று நடனமாடவுள்ளனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களிடம் பிரியங்கா தொடர்ந்து பேட்டி எடுக்கிறார்.

பிரியங்கா வீடியோ

பிரியங்கா வீடியோ

மேலும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடுவர்களிடமும் அவர் பேட்டி எடுக்கிறார். கலகலப்பாக போகும் அந்த வீடியோவில் பாவனி மற்றும் அமீரிடமும் அவர் பேட்டி எடுக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் திருமணமா என்று அவர் இருவரிடமும் கேட்கிறார். அதற்கு அமீர், பாவனி என்ன மாதிரியான எதிர்பார்ப்பில் உள்ளார் என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

Recommended Video

ஒன்று சேர்ந்த Biggboss பிரபலங்கள் | Thotta | Rio Raj | Ramya Pandian | Tamil Filmibeat
அமீருக்கு பிரண்ட்ஷிப் பேண்ட்

அமீருக்கு பிரண்ட்ஷிப் பேண்ட்

முன்னதாக தான் அமீருக்கு ராக்கி கட்டப் போகிறேன் என்று சிரித்துக் கொண்டே பாவனி கூறுகிறார். தொடர்ந்து பிரியங்கா அவரை மிரட்டுகிறார். இதையடுத்து அமீருக்கு தான் பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டப்போவதாக பாவனி கூறுகிறார். தொடர்ந்து பேசும் பிரியங்கா, அவர்கள் இருவரிடமும் மக்கள் அதிகமாக எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X