என்னிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இல்லை-பிரியங்கா சோப்ரா

சமீபத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் காத்ரீனா கைப் ஆகியோரது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் பிரியங்காவுக்கு மும்பையில் மட்டும் 11 வீடுகள் இருப்பது தெரியவந்ததாக செய்திகள் கூறின. மேலும் கணக்கில் வராத சொத்துக்கள் பலவும் அவரிடம் இருப்பதாகவும் செய்திகள் கூறின.
ஆனால் இதை பிரியங்கா மறுத்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரியங்காவிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை, அவருக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதற்காக பரப்பி விடப்பட்டவை இவை. இந்த செய்திகளை பிரியங்கா முழுமையாக மறுக்கிறார். யாரோ முகம் தெரியாத சிலர் தரும் இந்த தவறான செய்திகளை மீடியாக்கள் கண்மூடித்தனமாக வெளியிடுவது குறித்து பிரியங்கா வருத்தமடைந்துள்ளார்.
வருமான வரித்துறையினருக்கு பிரியங்கா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். விசாரணை தொடருவதால் இதற்கு மேல் விளக்கம் அளிக்க விரும்பவில்லை என்றார்.
பிரியங்காவிடம் 11 வீடுகள் தவிர 6 கோடி அளவுக்கு கணக்கில்வராத பணமும் இருப்பதாகவும் வருமான வரி விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











