இதுதான் உங்க பாசிட்டிவிட்டியா பிரியங்கா? அக்‌ஷராவை மட்டும் அழ வைத்து வேடிக்கை பார்த்தது ஏன்?

சென்னை: ராஜு பாய் அக்‌ஷராவுக்கு லைக் போட்டதற்கு அவரிடம் சண்டை போட்டதிலேயே பிரியங்காவின் பாசிட்டிவிட்டி முகத்திரை கிழிந்து விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும், அக்‌ஷரா சொன்ன அதே ஸ்டோரி போலத் தான் பிரியங்காவின் குட்டி ஸ்டோரி (அது கூட காப்பி) இருந்தது என்றும் அக்‌ஷரா அப்படி அழுதததற்கு காரணம் பிரியங்கா தான் என அக்‌ஷரா ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

பிரியங்கா தனது ஆட்டிட்யூட்டை காட்ட ஆரம்பித்ததன் காரணமாகத்தான் அவருக்கு பலரும் லைக்குகளை திடீரென டிஸ்லைக்காக மாற்ற ஆரம்பித்தனர் என்றும் சமூக வலைதளங்களில் நேற்றைய பிக் பாஸ் எபிசோட் குறித்த விவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன.

கிழிந்தது முகத்திரை

கிழிந்தது முகத்திரை

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா இதுவரை பிக் பாஸ் வீட்டில் எல்லோரையும் கலாய்த்துக் கொண்டு ஏன் பிக் பாஸை பெரிய பாஸ், நைட்டி திருடன் உள்ளிட்ட வார்த்தைகளை போட்டு அட்டகாசம் பண்ணி தான் ஒரு ஜாலியான பெண் என காட்டிக் கொண்டு வந்த நிலையில், நேற்று அக்‌ஷரா விஷயத்தில் பிரியங்கா நடந்து கொண்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பிரியங்காவின் முகத்திரை கிழிய ஆரம்பித்துள்ளதாக கமெண்ட் அடித்துள்ளனர்.

கதறி அழுத அக்‌ஷரா

கதறி அழுத அக்‌ஷரா

அக்‌ஷரா ரெட்டி தனது அப்பாவின் மரணத்தை பற்றி அவருக்கு தெரிந்த விதத்தில் சொல்லி விட்டு வந்த நிலையில், அதில் உண்மை இருந்ததாக ராஜு ஜெயமோகன் லைக் போட்டிருந்தார். ஆனால், அது ஏன் என கேட்டு அக்‌ஷராவை அசிங்கப்படுத்திய பிரியங்காவின் பேச்சு அக்‌ஷரா ரெட்டியை தனியாக சென்று கதறி அழ வைத்தது. அக்‌ஷராவின் அழுகைக்கு பிரியங்கா தான் முழு காரணம் என்று நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

இதுதான் பாசிட்டிவிட்டியா

இதுதான் பாசிட்டிவிட்டியா

மேலும், பிரியங்கா கதை சொல்லும் போது யாராவது கஷ்டப்பட்டா அவங்கள உடனே அந்த கஷ்டத்தில் இருந்து விலக்கி சந்தோஷப்படுத்துவேன். அது தான் என் பாசிட்டிவிட்டி என தம்பட்டம் அடித்த நிலையில், அக்‌ஷரா ரெட்டி விஷயத்தில் மட்டும் எங்கே போனது உங்க பாசிட்டிவிட்டி என பிக் பாஸ் ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.

தனக்கு வந்தா ரத்தம்

தனக்கு வந்தா ரத்தம்

பிரியங்காவின் கதையை கேட்ட பிறகு ராஜு உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களின் லைக்குகளை டிஸ்லைக்குகளாக மாற்றிய நிலையில், கிச்சன் ஏரியாவில் பிரியங்காவும் அழ ஆரம்பித்தார். அக்‌ஷரா அழும் போது ஆறுதல் சொல்ல ஒருவர் கூட இல்லாத நிலையில், பிரியங்கா அழும் போது பக்க பலமாக இமான் அண்ணாச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி மோட்

சந்திரமுகி மோட்

இதுவரை ஜாலியா கங்காவா இருந்த பிரியங்கா இப்போ அழ ஆரம்பித்த நிலையில், சீக்கிரமே அவரும் சந்திரமுகி மோடுக்கு மாறி சண்டை போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எல்லாம் விஜய் டிவியில் சாத்தியம் என பிக் பாஸ் ரசிகர்கள் வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X