பாவனி பஞ்சாயத்தை தொடர்ந்து பிரியங்கா தாமரை பிரச்சனையும் ஓவர்.. வைரலாகும் இரண்டாவது புரமோ!
சென்னை: பிக் பாஸ் வீடு வெள்ளிக்கிழமை எபிசோடுக்காக சமாதான வீடாக மாறிவிட்டதை பார்த்து ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி உள்ளனர்.
வாரம் முழுக்க கேவலமாக சண்டை போடுவதும், வார இறுதி நாட்களில் கமல் சார் வருவதால் சமாதானம் ஆகி பிரச்சனையை முடித்துக் கொள்வதுமாகவே இந்த ஷோ சென்று கொண்டிருக்கிறது.
முதல் புரமோவில் பாவனி மற்றும் ராஜு இடையே பஞ்சாயத்து முடிந்த நிலையில், இரண்டாவது புரமோவில் தாமரை மற்றும் பிரியங்கா பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பாவனி பஞ்சாயத்து
பாவனிக்கும் அபிநய்க்கும் இடையே பாவனிக்கும் அமீருக்கும் இடையே இருப்பது நட்பா? காதலா? என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு தேவையில்லாத டாப்பிக்கை பேசி டிஆர்பியை எகிற வைத்த விஜய் டிவி பிரச்சனை பெரிதானதை அறிந்து கொண்டு அதை அப்படியே சமாதானப்படுத்தி முடிப்பது போல கொண்டு சென்று விட்டனர் என்கிற குற்றச்சாட்டை பாவனி பஞ்சாயத்து முடிந்தாலும் முடிக்காமல் பாவனி ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

பிரியங்கா எங்கே
முதல் புரமோவில் பிரியங்காவை காட்டாத நிலையில், பிரியங்கா எங்கே? பிரியங்கா இருந்திருந்தால் இப்படியொரு சமாதான பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுத்திருக்க மாட்டார். மேலும், பிரச்சனையை கொளுத்திப் போட்டு குளிர் காய்ந்திருப்பார் என பொங்கியவர்களையும் ஆஃப் பண்ணும் விதமாக இரண்டாவது புரமோ வெளியாகி உள்ளது.

தாமரையுடன் சமாதானம்
பிக் பாஸ் வீட்டில் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் பிரியங்கா தான் என நேற்று இமான் அண்ணாச்சியும் தாமரையும் வெளுத்து வாங்கிய நிலையில், தாமரை செல்வி பிரியங்கா உசுப்பேத்துறதனால தான் பிரச்சனையே என ஒரே போடாக போட்ட நிலையில், இரண்டாவது புரமோவில் பிரியங்கா மீண்டும் வந்து தாமரையை கட்டிப்பிடித்து சமாதானம் ஆகி விட்டார்.

சம்பந்தம் இல்லாமல் கத்துற
நேத்து நடந்த சண்டை என்னன்னே தெரியாம நீ சம்பந்தம் இல்லாமல் கத்துற.. விளையாட்டு புரியல.. அது புரிஞ்சிடுச்சுன்னா நீ வேற இல்லை.. அவர் வேற இல்லை என தாமரை பிரியங்காவுக்கே புரியும் படி எடுத்தும் சொல்லும் இரண்டாவது புரமோ ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது.

அத்தனையும் நடிப்பு
வார நாட்களில் பகைவர்களை போல சண்டை போட்டுக் கொள்வதும் வார இறுதி நாட்களில் சண்டைகளை மறந்து சமாதானம் ஆகி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வதுமான நாடகம் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து நடந்து வருவதை பார்த்த ரசிகர்கள் அத்தனையும் நடிப்பு என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

கமலுக்கு என்ன வேலை
இப்படி நீங்களே உங்களுக்குள் சண்டை போட்டு சமாதானம் ஆகி விட்டால் பிறகு சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல் எந்த பஞ்சாயத்தை சரி பண்ணுவார். அவருக்கு என்ன வேலை இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











