தாமரை செல்வி ஈகோவை சீண்டிவிட்ட பிரியங்கா.. சும்மா கொழுந்து விட்டு எரியுது பிக் பாஸ் வீடு!
சென்னை: "பட்டிக்காடா பட்டணமா" டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. நகரத்து அணியினர் தொடர்ந்து அதில் ஸ்கோர் செய்து வருகின்றனர்.
இன்றைய முதல் புரமோவிலும் அது தொடர்பான காட்சிகளே வெளியாகி உள்ளன.
பிரியங்கா எங்க கிட்ட தான் 5 காயினும் இருக்கு.. உங்க கிராமத்து அணியில் ஒருத்தர் கிட்டேயும் காயினே இல்லை என சீண்ட தாமரை செல்வி தாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளார்.

நல்லா பேசும் நகரவாசிகள்
கிராமமா? நகரமா? என்கிற டாப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கிராமம் குறித்த சிறப்பான விஷயங்களை பேசாமல் அரை குறை ஆடை அணிகின்றனர். கட்டிப்பிடிக்கின்றனர் என பிற்போக்குத் தனமாக பேசி நகரவாசிகள் நல்லா பேச வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் கிராமவாசிகள்.

சண்டை போடும் தாமரை
தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பேசாமல், அடுத்தவர் பேசும் போது அந்த டாஸ்க்குக்காக பேசுகின்றனர் அவர்களின் பாயின்ட்டுகளுக்கு எதிர் கருத்தை எடுத்து வைக்க வேண்டும் என தெரியாமல் சுருதி, சிபி மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் பேசும் போதே குறுக்கிட்டுப் பேசி சண்டை போட்டு வந்தார்.

சீண்டிவிட்ட பிரியங்கா
தாமரை செல்வியை சும்மா சீண்டிவிட்டாலே போதும் செம கன்டென்ட் கிடைக்கும் என நன்றாக புரிந்து கொண்ட பிரியங்கா இன்றைய முதல் புரமோவில் மீண்டும் தாமரை செல்வியின் ஈகோவை சீண்டிவிட்டு பிக் பாஸ் வீட்டையே பற்றி எரிய வைத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உங்க கிட்ட ஒண்ணுமில்ல
நகரம் தான் கெத்து என்றும் இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்கில் நகரத்து மக்களிடமே அனைத்து காயின்களும் இருக்கு என நடுவர் இசைவாணியையும் நகரத்து மக்கள் லிஸ்ட்டிலேயே சேர்த்து பேசிய பிரியங்கா உங்க கிட்ட ஒண்ணுமில்ல ஸ்வாகா என நாமம் போட்டு காட்ட தாமரை செல்வி டென்ஷன் ஆகி விட்டார்.

அநியாயமா விளையாடுறீங்க
தாமரை செல்வியின் காயினை சுருதி எடுத்து வைத்திருக்கும் பஞ்சாயத்து இன்னமும் பைசல் ஆகாத நிலையில், யாரு பக்கம் நியாயம் அநியாயமா விளையாடுறதுக்கு பேரு நியாயம் கிடையாது என சுருதியை இழுத்து விட்டு தாமரை பேசும் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சூடான தாமரை
ஒரு எமோஷனல் பாண்ட்னா அதை வந்து மத்த டீம் வெளியில இருக்கும் போது காட்டணும் என சுருதி அதே விஷயத்தை பற்றி பேச மீண்டும் சூடான தாமரை கமல் சார் அதை பத்தி பேசற வரைக்கும் பேசக் கூடாதுனா தான் இருக்கேன் என சுருதியிடம் நேரடியாக சண்டைக்கு சென்றுவிட்டார். பிரியங்கா நல்லா கொளுத்திப்போட்டுட்டாங்க என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











