வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிரியங்கா...அழுதபடி வெளியேறினார்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாம் இடத்தில் இருந்த பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டைவிட்டு பிக்பாஸ் அவரை வெளியேற்றினார். முதலில் அழுதபடி மறுத்த பிரியங்காவை சமாதானப்படுத்தி பிக்பாஸ் வெளியே அனுப்பி வைத்தார்.

வித்தியாசமான அனுபவம் கொடுத்த பிக்பாஸ் சீசன் 5

வித்தியாசமான அனுபவம் கொடுத்த பிக்பாஸ் சீசன் 5


பிக்பாஸ் சீசன் 5 வித்தியாசமாக பலவித அனுபவங்களை தரும் வீடாக அமைந்துள்ளது. போட்டியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர் திருநங்கை நமிதா வீட்டை விட்டு வெளியேறினார். அவரது உடல் நிலை சரியில்லை எனக் கூறப்பட்டது, ஆனால் உண்மையான காரணத்தை கடைசி வரை யாரும் சொல்லவில்லை. மன அழுத்தத்தில் அவர் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

சிறப்பாக விளையாடிய பிரியங்கா

சிறப்பாக விளையாடிய பிரியங்கா

அடுத்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் போட்டியிட்டு வந்த நிலையில் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் வலுவான போட்டியாளராக இருந்து வந்தார். சைவ உணவை மட்டும் சாப்பிடும் பிரியங்காவிற்கு உணவு ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அவர் சமாளித்து விளையாடி வந்தார். தொடர்ச்சியாக 2 ஆம் இடத்திலேயே நீடித்து வந்தார்.

கடைசி நாள் பிரியங்காவுக்கு உடல் நலன் பாதிப்பு

கடைசி நாள் பிரியங்காவுக்கு உடல் நலன் பாதிப்பு

திடீரென கடைசி 2 நாள் இருக்கும் நேரத்தில் பிரியங்காவிற்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் சீரியல் அணியினர் வரும் நேரத்தில் திடீரென பிரியங்காவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மறுநாள் பொங்கல் திருநாளான இன்று காலையில் பிரியங்கா புத்தாடை அணிந்து உற்சாகமாக இருந்தார்.

சோர்வான நிலையில் பிரியங்கா

சோர்வான நிலையில் பிரியங்கா

மதிய உணவுக்குப்பின் அனைவரும் உறங்கினாலும் மருத்துவர் ஆலோசனைப்படி பிரியங்கா மட்டுமே உறங்க அனுமதி அளித்தார். சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து வந்த அவர் சோர்வாக காணப்பட்டார். உடனடியாக மருத்துவரை பார்த்தார், பின்னர் அவரை கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். பிரியங்கா உங்கள் உடல் நிலைக்குறித்து மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து உங்களை வெளியேற்றுகிறோம் என பிக்பாஸ் அறிவித்தார்.

கண்ணீர் விட்டு அழுதும் வெளியேற்றப்பட்ட பிரியங்கா

கண்ணீர் விட்டு அழுதும் வெளியேற்றப்பட்ட பிரியங்கா

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா நான் வெளியேற மாட்டேன் என கண்ணீர் விட்டு அழுதார், அப்போது அவர் முகம் வாடி மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஆனால் பிக்பாஸ் பிரியங்காவிடம் கனிவாக வேறு வழியில்லை பிரியங்கா நீங்கள் வெளியேறித்தான் ஆகவேண்டும், ஒரு நாள் ஓய்வுக்குப்பின் நீங்கள் ஃபைனலில் கலந்துக்கொள்ளலாம் என்று கூறினார். நான் போகவில்லை என பிரியங்கா அழுதார், ஆனால் நிலையை எடுத்துச் சொல்லி பிரியங்காவை வெளியேற்றினார் பிக்பாஸ். பின்னர் ராஜுவை அழைத்து விஷயத்தை ஹோம்மேட்ஸிடம் சொல்லச்சொன்னார் பிக்பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X