twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போனவாரம் நயன்.. இந்த வாரம் விஜய் சேதுபதி.. பாவம்ங்க ரசிகர்கள், இப்டி நம்ப வச்சு ஏமாத்துறீங்களே!

    பாகுபலி பட விவகாரம் தொடர்பாக அர்கா மீடியா தொடர்ந்த வழக்கால், சிந்துபாத் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    |

    பாகுபலி பட விவகாரம் தொடர்பாக அர்கா மீடியா தொடர்ந்த வழக்கால், சிந்துபாத் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை: விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் ரிலீசாவதில் பிரச்சினை நீடித்து வருகிறது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ள திரைப்படம் சிந்துபாத். விஜய் சேதுபதி, அவரது மகன் சூர்யா, அஞ்சலி, லிங்கா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஜய் சேதுபதி, அருண்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இத்திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை ரிலீசாகுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பாகுபலி பட தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா தொடர்ந்துள்ள வழக்கு தான்.

    பாகுபலி பிரச்சினை:

    பாகுபலி பிரச்சினை:

    பாகுபலி படத்தை தமிழ்நாட்டில் விநியோகித்தவர் ராஜராஜன். இவர் தான் சிந்துபாத் திரைப்படத்தின் தயாரிப்பாளர். பாகுபலி பட வசூல் தொகையை, ராஜராஜன் முறையாக வழங்கவில்லை என்பது அர்கா மீடியாவின் குற்றச்சாட்டு. ஆனால் வசூல் தொகையை முறையாக செலுத்திவிட்டதாகக் கூறுகிறார் ராஜராஜன்.

    தடை:

    தடை:

    இந்த விவகாரம் தொடர்பாக அர்கா மீடியா நிறுவனம் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாகுபலி பட வசூல் விவகாரம் முடியும் வரை சிந்துபாத் திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தது.

    ஒத்திவைப்பு:

    ஒத்திவைப்பு:

    இந்த தடையை எதிர்த்து ராஜராஜன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தடையை நீக்கக் கூடாது என அர்கா மீடியா பதில் மனு அளித்துள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் சிந்துபாத் படத்தினை ஜூன் 24ம் தேதி வரை ரிலீஸ் செய்யக்கூடாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

    நோட்டீஸ்:

    நோட்டீஸ்:

    இந்நிலையில், சிந்துபாத் திரைப்படம் நாளை ஜூன் 21ம் தேதி ரிலீசாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அர்கா மீடியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், படம் நாளை ரிலீசானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சிந்துபாத் தயாரிப்பாளருக்கு அர்கா மீடியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ரசிகர்கள் ஏமாற்றம்:

    ரசிகர்கள் ஏமாற்றம்:

    இதனால் சிந்துபாத் திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை ரிலீசாகுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் பற்றி ராஜராஜன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    கொலையுதிர் காலம்:

    கொலையுதிர் காலம்:

    நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கும் இதேபோன்ற நிலை தான் ஏற்பட்டது. ஜூன் 14ம் தேதி அத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிபோய்விட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் படத்திற்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரிலீசில் சந்தேகம்:

    ரிலீசில் சந்தேகம்:

    ஜூன் 21ம் தேதி, விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் பக்கிரி, 'கனா' தர்ஷன் நடித்துள்ள தும்பா, புதுமுகங்கள் நடித்துள்ள மோசடி, டிஜிட்டல் செய்யப்பட்டுள்ள சிவாஜியின் வசந்த மாளிகை ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேசில் சிந்துபாத் இடம்பெறுமா என்பது நாளை தான் தெரியவரும்.

    English summary
    The Arka media have sent legal notice to K productions Rajarajan, questioning the dispute regarding Bahubali, which is now a problem for Sindhubaadh release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X