தாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்?

டிராப் என் அறிவிக்கப்பட்ட சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அம்மா உஷா, தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததே இதற்கு காரணமாம்.

Recommended Video

Simbu Mother Emotional | தாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்?

சென்னை: செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார்.

ஆனால், அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றும், இதனால், படத்தை டிராப் செய்வதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

தற்போது, சிம்புவின் அம்மா நடத்திய பேச்சுவார்த்தையால், மீண்டும் மாநாடு படம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன பிரச்னை?

என்ன பிரச்னை?

செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நடித்ததன் மூலம் மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு சிம்பு வந்துவிட்டார் என சிம்பு ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருந்த நிலையில், திரும்பவும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வருவதில்லை என்ற பிரச்னை கிளம்பியது.

படங்கள் டிராப்

படங்கள் டிராப்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு பட ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு சிம்பு வருவதில்லை எனக் கூறி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்த படத்தை டிராப் செய்து விட்டார். இதே போல, கன்னட ரீமேக் படமான மஃப்டியும் டிராப் ஆனது.

நான் பொறுப்பு

நான் பொறுப்பு

மாநாடு படம் டிராப் ஆன நிலையில், சிம்புவுக்கு புதிய படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், டி.ராஜேந்தரின் மனைவி மற்றும் சிம்புவின் அம்மாவான திருமதி உஷா, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

அப்போது, இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருப்பார் அதற்கு தான் பொறுப்பு என சிம்புவின் அம்மா கூறியுள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தைக்கு சுரேஷ் காமாட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மாநாடு

மீண்டும் மாநாடு

பேச்சுவார்த்தை வெற்றி அடைந்த நிலையில், டிராப் செய்யப்பட்ட மாநாடு படத்தை மீண்டும் எடுக்கும் முடிவில் தயாரிப்பு தரப்பு இறங்கியுள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X