வடிவேலுவை விடாமல் துரத்தும் ‘இம்சை அரசன்’ பிரச்சினை.. ‘பேய்மாமா’விற்கும் தடை?

வடிவேலுவின் பேய்மாமா படத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பேய் மாமா படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடங்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் துவங்கிய 10 நாட்களிலேயே அப்படம் நின்றுபோனது.

வடிவேலுவிற்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே அப்படம் பாதியில் நிற்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணானது.

ஷங்கர் புகார்:

ஷங்கர் புகார்:

தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் வடிவேலுவை யாரும் புதிய படத்தில் நடிக்க அணுகக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

பேய்மாமா பர்ஸ்ட் லுக்:

பேய்மாமா பர்ஸ்ட் லுக்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடிவேலு நடிக்கும் புதிய படம் என பேய்மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், அப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர். இந்தத் தகவலால் வடிவேலு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய பிரச்சினை:

புதிய பிரச்சினை:

ஆனால், இந்தப் படத்திற்கும் தற்போது புதிய பிரச்சினை முளைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சக்தி சிதம்பரத்தை அழைத்துப் பேசி, பேய்மாமா படத்திற்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடித்துக் கொடுத்தபிறகே வடிவேலு வேறு புதிய படங்களில் நடிக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மீண்டும் சிக்கல்:

மீண்டும் சிக்கல்:

அதோடு, புதிய படத்திற்காக வடிவேலுவை அணுகிய சில இயக்குநர்களையும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைத்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் வடிவேலு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X