ஏன் எதுக்கு? ஜி.வி.பிரகாஷ்குமார் படத் தயாரிப்பாளர் திடீர் விலகல்..இணைந்தார் வேறு தயாரிப்பாளர்!

By

சென்னை: ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் விலகியதை அடுத்து வேறு தயாரிப்பாளர் படத்தை தயாரிக்கிறார்.

'வெயில்' மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அஜீத்தின் கிரீடம், தனுஷின் பொல்லாதவன், கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், ஆர்யாவின் மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள அவர், சமீபத்தில் ஹிட்டான அசுரன் படத்துக்கும் இசை அமைத்திருந்தார்.

காதலிக்க யாருமில்லை

காதலிக்க யாருமில்லை

இதையடுத்து சாம் ஆண்டன் இயக்கிய 'டார்லிங்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஹாரார் காமெடி படமான இது ஹிட்டானது. இதையடுத்து, பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை, 4 ஜி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

வாடிவாசல்

வாடிவாசல்

இந்தப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, கங்கனா நடிக்கும் தலைவி படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் உட்பட சில படங்களுக்கு இசை அமைக்க உள்ளார்.

வர்ஷா பொல்லம்மா

வர்ஷா பொல்லம்மா

இந்நிலையில், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கும் படத்தில் இப்போது, நடிக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இதை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

விஷ்ணு ரங்கசாமி

விஷ்ணு ரங்கசாமி

இதில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர்களுடன் வாகை சந்திரசேகர், குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆக்‌ஷன், த்ரில்லர்

ஆக்‌ஷன், த்ரில்லர்

ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன், த்ரில்லர் கதையாக உருவாக்கி வருகிறார்கள். இதில் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவராக நடிக்கிறார். இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். லாக்டவுன் முடிந்ததும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X