லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு.. பெயர் என்ன தெரியுமா?.. வேற மாதிரி இருக்கே
சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றியிருந்தார். இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். அந்தப் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.
முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.
எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிறார். படத்தின் பெயர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றிய அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து, கமல் தயாரித்து எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
பென்ஸ்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி லாரன்ஸ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தை தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் லோகேஷ். பாக்யராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று தயாரிப்பாளராகவும் ஜொலிக்க வேண்டும் என லோகியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











