»   »  மிரட்டல்: தயாரிப்பாளர் கைது

மிரட்டல்: தயாரிப்பாளர் கைது

Subscribe to Oneindia Tamil

ஏகப்பட்ட வெளி வராத படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பாபு கணேஷ்கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் பாபு கணேஷ். சில படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தயாரிப்பாளராக மாறினார். பல படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போட்டுகோலிவுட்டையே கலக்குவார். ஆனால் ஒரு படம் கூட முடிந்து வெளியே வந்ததாகவரலாறே கிடையாது.

மும்தாஜை வைத்து மும்தாஜ் என்ற பெயரிலேயே ஒரு படத்தைத் தயாரித்தார்.ஆனால் பாபு கணேஷின் எண்ணத்தை அறிந்த மும்தாஜ் பாதியிலேயே படத்திலிருந்துவெளியேறினார்.

இதனால் கடுப்பான பாபு கணேஷ், கும்தாஜ் என்ற பெண்ணை அழைத்து வந்து ஒருபடத்தைத் தயாரித்தார்.

பின்னர் மந்த்ராவை தனக்கு ஜோடியாக்கி ஒரு படத்தை எடுத்தார். இதைத் தொடர்ந்துபல்வேறு படங்களைத் தயாரிப்பதாக பாபு கணேஷ் பெயரில் விளம்பரம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு படம் வந்ததாக தெரியவில்லை.

இந் நிலையில் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது அவருக்கும்,பியாரிலால் என்ற தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சினை உருவானது. தனக்குஆதரவாக ஓட்டுப் போடாதது ஏன் என்று கேட்டு பியாரிலாலிடம் பாபு கணேஷ்தகராறு செய்தார். இதுதொடர்பாக மணலி காவல் நிலையத்தில் பியாரிலால் புகார்கொடுத்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் பியாரிலால் காரில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாபு கணேஷ் சிலருடன் வந்து காரை மறுத்துபியாரிலாலை மிரட்டியுள்ளார். எங்கிருந்தோ வந்த நீ என்னை எதிர்க்கிறாயா, எனக்குஎதிராக புகார் கொடுக்கிறாயா, இப்படியே போனால் உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன் என பாபு கணேஷ் மிரட்டியதாகத் தெரிகிறது.

அரண்டு போன பியாரிலால் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதையடுத்து துணை ஆணையர் சம்பத், உதவி ஆணையர் சந்திரன் ஆகியோர் பாபுகணேஷை அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்தகூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Read more about: tamil film producer arrested
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil