ராஜ் டிவி இயக்குனர் மகளை மணந்த தயாரிப்பாளர் அபினேஷ்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சென்னை: சினிமா தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன், ராஜ் டிவியின் இயக்குனர் ரவீந்திரனின் மகள் நந்தினி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரிப்பு குழுமத்தின் நிர்வாக இயக்குனராகவும், துணை தலைவராகவும் உள்ளவர் அபினேஷ் இளங்கோவன். இறைவி, காதலும் கடந்து போகும், பாம்புச் சட்டை உள்ளிட்ட படங்களை அபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அபினேஷுக்கும், ராஜ் டிவியின் இயக்குனர் ரவீந்திரனின் மகள் நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

திருமண விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகை ராதிகா, சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











